Skip to main content

Posts

Featured Post

நீலிக்கண்ணீரின் தொல்கதை: சில இலக்கியப் பதிவுகள்.

நீலிக்கண்ணீர் என்ற தொல்லெச்சம் எப்படி நமது அன்றாட வாழ்வில் உரையாடுகிறது என்பதற்கு நீண்டகால ஆதாரப் பதிவுகள் உள்ளன. எப்படி நற்றிணையில் இருந்த முலை அறுத்தெறியும் காதை கண்ணகி காதைக்கு இளங்கோவுக்கு பாடுபொருளானதோ, அதுபோல தமிழ் வாழ்வியல் வரலாற்றில் நீலி என்ற பெண் பாத்திரம் போலியின் ரூபமானது.

அதாவது காஞ்சிபுரத்து வணிகன் தனது முதல் மனைவியை வஞ்சகமாகக் கொலை செய்துவிட்டு இரண்டாம் திருமணம் செய்கிறான். அவன் வணிக நோக்கமாக பழையனூர் வழியாகப் பயணமாகிறான். அப்போது அவனது முதல் மனைவி பேயாக மாறி அவனைப் பழிவாங்கத் துடித்து மனைவி போல உருமாற்றம் கொள்கிறாள். ஒரு தீய்ந்த கட்டையைப் பிள்ளையாக்கி இடுப்பில் வைத்தும் கொள்கிறாள். அப்போது அவன் அவளை மனைவியென ஏற்க மறுக்கிறான்.

திருவாலங்காட்டுக்கு வேளாளர்களுக்கு இந்த வழக்கு வந்து சேர்கிறது. வணிகன் தனது மனைவி இல்லை என்றும் இவளோடு சென்றால் தன்னை இந்தப் பேய் கொன்றுவிடுமு என்றும் கூறுகிறான்.  வேளாளர்களிடம் வணிகன் அவ்வாறு கூறும்போது அவளது இடுப்பிலிருந்த பிள்ளை அப்பா என அவனை அழைக்கிறது. அப்போது திகைத்துப் போன வேளாளர்கள் நீ இவளோடு ஒரு வீட்டில் தங்கு. அப்படி உன்னை இவள் கொன்று வ…
Recent posts

அரவிந்தன் நீலகண்டனின் நம்பக்கூடாத கடவுள்

அரவிந்தன் நீலகண்டன் மிக முக்கியமான தமிழ் ஆய்வாளர், கட்டுரையாளர், இந்துமதச் சிந்தனையாளர். அதைவிட தன்னை இந்துத்துவவாதி என்று வெளிப்படையாகவே அறிவித்தும் கொண்டவர். இந்துத்துவம் என்பதைத் தற்போதைய வன்முறை அரசியலுடன் வைத்து நோக்காமல் இந்துவாக வாழ்வது (Hinduness) என்ற பேருணர்வின் வெளிக்குள் விரித்துக் கொண்டவர். ஓரிடத்தில் ஏதோ குறிப்பை வாசிக்கும் போது  அவரது வீட்டில் ஆறாயிரத்துக்கும் அதிகமான நூல்கள் சூழ்ந்து இருந்தது என்றும் அதில் பல பழந்தமிழ் நூல்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. வெறிக் கூச்சல்களுக்கு மாத்திரம் இந்துத்துவம் என்பதைப் பிரததிநிதித்துவப்படுத்தாமல் அதனை அறிவார்ந்த விடயங்களுக்குப் பயன்படுத்தும் வெகுசிலரில் அரவிந்தன் நீலகண்டனும் ஒருவர். அரவிந்தன் எழுதிய பல கட்டுரைகள் மிகத் தரமான ஆய்வு நோக்கம் கொண்டவை. துல்லியமான வரலாற்றுத் தொன்மங்களால் புரட்டுகளை இட்டுநிரப்பிச் செல்லக்கூடியவை. அந்த வகையில் "நம்பக்கூடாத கடவுள்" என்ற கட்டுரை நூல் அரசியல், சமூகம், தொன்மம், மானுடம், பிரபஞ்சம், மதம் என்று பல கூட்டுக்களுக்குள் வைத்து இந்துமதத்தை விரித்து ஆராய்ந்துள்ளது. இந்தக் கட்டுரை இந்நூலு…

ஆய்ச்சியர் குரவை

சிலப்பதிகாரத்தின் மதுரைக் காண்டத்தில் ஆய்ச்சியர் குரவை என்றொரு செய்யுள் பகுதி இடம்பெறுகிறது. பழந்தமிழகத்தில் இடையர்குலப் பெண்களில் ஏழு தொடக்கம் பத்து வரையானவர்கள் ஒன்றுகூடி ஆடும் நடனத்தை ஆய்ச்சியர் குரவை என்று கூறுவர்.  இந்தக் குரவை நடனம் பற்றிப் புறநானூறு பாடல் ஒன்றில் இப்படிக் கூறப்பட்டிருக்கும். இதுதான் குரவை நடனம் பற்றிய தமிழின் முதல் இலக்கியக் குறிப்பு. "பனைப்போழ் செரீஇச்
சினமாந்தர் வெறிக்குரவை
ஓத நீரிற் பெயர்பு பொங்க" புறநானூற்றில் இருந்த இந்தக் குரவை நடனம் போர்வெறியுடன் தொடர்புடையது. பிற்காலத்தில் இந்த மரபு பல ஊடகங்களுக்கு மாற்றமடையத் தொடங்குகிறது. குறிப்பாகத் துர் அதிஷ்டங்களைச் சித்தரிக்கவும் இந்த நடனம் வெளிப்படு பொருளாகி நிற்கிறது. அப்படி ஒரு சமூகத்தால் ஒழுங்கமைக்கப்பட்ட நடனம்தான் சிலப்பதிகாரத்தில் வரும் ஆய்ச்சியர் குரவை. இந்தச் செய்யுளை மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள் பெருமை பூத்த கர்ச்சனையுடன் திரும்பத் திரும்பச் சொல்லிக் காட்டுவார். கண்ணனின் பெயரை உச்சரிக்காத நாக்கு இருந்தும் என்ன பயன் என்பது இந்தப்பாடலின் குறுகிய பொருள். இவ்வளவு எளிய சந்தமும்  பொருள் ரசமும்…

எல்லா சிவப்பும் உந்தன் கோபம்

"எல்லா சிவப்பும் உந்தன் கோபம்" என்று அலைபாயுதே படத்தின் பச்சை நிறமே பாடலின் இடைவரியாக மேலுள்ள வரி இடம்பெற்றிருக்கும். தனக்குப் பிடித்த பாடல் வரிகளில் மிக முக்கியமான ஆன்மீகத்தன்மை கொண்டது இது என்று ஜெயமோகன் ஒருமுறை (2012)  கூறியிருந்தார். ( ஜெ மிகக் கடுமையாக விமர்சிக்கும் பாடலாசிரியர் எழுதிய வரி என்று தெரிந்தபோதும் அதனை அவர் பாராட்டத் தயங்கியிருக்கவில்லை. இன்றைய கட்டுரையில் அரசாங்கத்தை விமர்சிப்பதும் அவருடைய பன்மைத்தன்மைக்கு உதாரணமாகக் கூறலாம். இதுவேறு பகுதி என்பதால் இதனை இப்போதைக்குத் தவிர்ப்போம்.) இதே போன்ற ஒரு ஆன்மீகத்தன்மை கொண்ட செய்யுளைத் திப்புத்தோளார் என்ற குறுந்தொகைக் கவிஞர் சங்ககாலத்தில் பாடியிருப்பார். காந்தள் என்பதை இங்கே கார்த்திகைப்பூ என்று நாம் கூறுவதுண்டு. அதனை வீரத்தின்- கோபத்தின் அடையாளமாகத் தமிழர்கள் காலந்தோறும் குறித்து வைத்திருப்பர். அதற்கு மிக நீண்ட வரலாறும் உண்டு. குறுந்தொகையின் முதல் பாடலாக இடம்பெற்றுள்ள இந்த பாடல்தான் அதற்கு முதலாவது ஆதாரம். "செங்களம் படக் கொன்று அவுணர்த் தேய்த்த செங்கோல் அம்பின் செங்கோட்டு யானை கழல் தொடி சேஎய் குன்றம்
குருதிப் ப…

விநாயகர்

திருமுருகன் காந்தி போன்ற தமிழ்ப் பிரிவினைவாதிகளை இன்னமும் இந்தியா போன்ற இறையாண்மை மிக்க ஒரு தேசம் உயிருடன் வைத்திருப்பதில் அல்லது வீதிகளில் சுதந்திரமாக நடமாட விட்டதில் இருந்து அந்த நாட்டின் ஜனநாயகம் எத்துணை கண்ணியமானது என்று அறிந்துகொள்ள முடிகிறது.  பச்சையான திரிபுவாதியாகவும் மேற்குலகில் செயற்படும் தமிழ்ப் பயங்கரவாத மற்றும் மதமாற்ற இயக்கங்களின் பணத்தில் கீழைத்தேசங்களில் குறிப்பாக தமிழ் இளையோரின் மனங்களில் பிரிவினையை வளர்ப்பதிலும் சீமானுக்கு அடுத்து முக்கிய பங்கு வகிப்பது திருமுருகன் காந்திதான். இந்த அபாயம் இலங்கை வரையும் பரவிக்கொண்டு செல்கிறது. திருமுருகன் காந்தி சென்ற வருடம் வங்கக் கடலைத் தமிழர்கடல் என்றும், தமிழீழம் அடையாமல் தாங்கள் ஓய்வதில்லை என்றும் கற்பனைகளை அளந்து விட்டார். இந்த வருடம் கூறுகிறார் விநாயகர் தமிழர்களின் கடவுள் இல்லை என்று. இந்த விவாதம் திராவிடக் கட்சிகளால் பரப்பி வளரவிடப்பட்ட ஒரு போலியான விவாதமாகும்.இவற்றை நிராகரிக்கப் போதுமான ஆதாரங்களைக் காலந்தோறும் தமிழ் இலக்கிய நூல்கள் நமக்களித்துள்ளன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில், சற்று பிற்பட்டதும் முர…