Skip to main content

Posts

Showing posts from December, 2016

வாடை

வாடை.
=====
தனியாக அலையும்
நத்தைக்கு
குருட்டு வீதிகளின் சாளரம்
காற்றைத் திறந்து
விட்டுக் கொண்டிருக்கிறது.பிணச் சாம்பலின்
வாசனையுடன்
தென்றலொன்று
வீட்டு ஜன்னலுக்கால் புகுந்து
அகராதியை எரித்துப்
போகிறது.கயிற்றில் காயப்போட்ட
சாரம் ஒன்று
தூரமான வான்வழி வந்த
வாடையுடன் உறவாடி
மீளவும் நீரில்
நீந்துகிறது.நத்தைக்கு நான் போர்த்திய
ஈரச் சாரத்தை எடுத்த
வாடைக்காற்று
அகராதியின்
இறுதிப் பக்கங்களால்
தன்னையே வாசித்து
நகர்கிறது.எங்களைப் போலத்தான்
எங்களைச் சார்ந்தவைகளும்.
என்ன ஒன்று நாங்கள்////
நீங்கள் மீதமாக நம்முடன்.....
====
இரட்ணேஸ்வரன் சுயாந்தன்.

அலங்காரம்

அலங்காரம்.
==========
அலங்காரம் செய்துகொண்டு வானில் பறக்கின்ற ஒரு பறவைக்கு,
அதிகபட்சம் என்ன தெரியும்.
அதன் அலங்காரம் மட்டும் அழகென்று தெரியும்.
புதிதாகக் கட்டப்பட்ட குளத்தங்கரையில் கரைகின்ற பனித்துளிகளுக்கு வானில் பறக்கின்ற பறவையின் அலங்காரம் என்னவாகத் தெரியும்.
குளத்தின் தனித்த மணலில் பறவையின் இறகுகளால் நான் ஏதும் குறுங்கவிதை எழுதும் போது நம் பூமிக்கான அலங்காரம் எல்லாமே அழகென்றும் தெரியலாம்- தெரியாமலும் போகலாம்.
அது ஒவ்வொருத்தரின் கிறுக்கல்களைப் பொறுத்தது......
===
இ.சுயாந்தன்.

இரண்டு கவிதைகள்

1. மழைக்கான முகமூடி.
======
நான் உன்னோடு நடந்து கொண்டிருக்கும் போது, யார்யாரோ கேட்டார்கள்,
வரும் வழியில் அடை மழை பெய்கின்றதா என்று??....நான் அதனைக் கவனித்திருக்கவில்லை.
எனினும் அவர்களுக்குச்
சரியான பதிலைச் சொன்னேன். சிலவேளைகளில் அவர்கள் என்னைக் கிறுக்கன் என்றும் நினைத்திருக்கலாம்.
இதனைப் பின்பு தான் ஜோசித்துப் பார்த்தேன்.....!!!!
==2. கைச் சிலம்பு.
========
கண்ணகி என்ற பெயருக்கு
ஆண்பால் பெயர் தேடினேன்.உன் அப்பன் அம்பலத்தான்
பெயர் ஞாபகம் வந்தது.என்ன ஒரு கேவலம்.
உன் மாதா ஒரு தேவதாசி.
தந்தை ஒரு பரத்தையர் சுகம் நாடும் கூத்தாடி.
கூடவே விந்தனு உற்பத்தி விட்டோடிப்போன சிறுவன்.முலைகளுக்கு உணர்வுகளை அடகுவைக்கும் அசிங்கம் கொண்ட நீ
என்னிடம் - என் நண்பரிடம்
கௌரவம் பேசுவது மஹாகேவலம் மூடனே.
என் வரிகளை வாசிக்கும் மறுகணம் நீ காசியில் சென்று அகோரியாக மாறி என்னைப் பலி கொள்ளு.மறுபடியும் காத்திரு
மரணத்தின் முரண்பாடுகளை வழிவெட்டி உன் மூளையை
என் உள்ளங்கைகளால் குடைந்து சிவப்பு அதிகாரத்தை
நிலை நிறுத்துவேன்.கையில் சிலம்புக்காகக் காத்திருக்கிறேன்....
=====
இரட்ணேஸ்வரன் சுயாந்தன்.

நான் விரும்பும் நதி.

நான் விரும்பும் நதி.
=======
நான் விரும்பும் நதியிடம் ஒரு கடலுண்டு.
நீளும் முகங்களுக்கு அங்கே ஒரு கரையில்லை.
நான் விரும்பும் நதியிடம் சிறு மணலுண்டு.
அங்கு கிளிஞ்சல்கள் நிலவிடம் இரவல் போயுள்ளன.
நான் விரும்பும் நதியிடம் பல கவிதைகளுண்டு.
இருந்த ஒரு கவிஞனும் களவு போயுள்ளான்.
நான் விரும்பிய நதியிடம் நூறு நிலவுண்டு.
ஒரேயொரு நட்சத்திரம் மலைகளுக்குள் ஒளிந்துள்ளது.
நான் விரும்பும் நதியிடம் ஒரு மலருண்டு.
அதன் வாசனைகள் யாவும் நதியிடம் கொட்டிக்கிடக்கின்றது.நான் விரும்பும் நதியிடம் நான் உள்ளேன்.
நான் விரும்பும் நதியிடம் நாம் தான் இல்லை.
நான் விரும்பாத நான் இடம் நதியில்லை.
நான் விரும்பிய நாம் இடம்
நதியுண்டு.
நான் விரும்பிய நதி தரையிலில்லை.
நான் விரும்பும் நதி
கடலிலுண்டு.நான் விரும்பிய நதியும்
நான் ஐ விரும்பாத நதியும்
நீ மட்டும் தான்.
கண்டீரோ!!!!
நாம் விரும்பும் நதி சில நேரங்களில் இப்படி நீ
என்றாகிப் போவதுமுண்டு....
==
By:: இரட்ணேஸ்வரன் சுயாந்தன்.

குழந்தைகளும் குதிரை வீரனும்.

குழந்தைகளும் குதிரை வீரனும்.

காலடியில் நசியும்
மழையின் துளிகளை
மீட்டெடுக்க வானவில்
மீதேறி குதிரைவீரன் வந்தான்...மேகம்மீது படர்ந்திருந்த
எனது கால்களை எடுத்து
சூரியனில் வைத்துவிடுகிறான்...அங்கு Halloween அணிந்திருந்த
குழந்தைகள் என்னை
மிரட்டிக்கொண்டுள்ளனர்....நான்;
குழந்தைகளுக்கும்,
குதிரைவீரனுக்கும்
"பயத்தைப்" பரிசளித்துக்கொண்டிருக்கிறேன்....

சுயாந்தன்.#

நெடுந்தூரம் போனவள்

நெடுந்தூரம் போனவள்.
=======
என் காதலி யாவருக்குமானவள்.
என் காதலி கடவுள் போன்றவள்.
என் காதலி பிசாசு போன்றவள்.
என் காதலி பறவை போன்றவள்.
என் காதலி கடல் போன்றவள்.
என் காதலி என் போன்றவள்.
நான் என் காதலி போன்றவன்.அவள் எனக்கொரு கவிதை
தந்து சென்றாள்.
அவள் எனக்கொரு தென்றல் தந்து சென்றாள்.
அவள் எனக்கொரு காருண்யம் தந்து சென்றாள்.
அவள் எனக்கொரு வானம்
தந்து சென்றாள்.
அவள் எனக்கொரு சிறகு
தந்து சென்றாள்.
அவள் எனக்கொரு கனவு
தந்து சென்றாள்.
அவள் எனக்கொரு பூமி
தந்து சென்றாள்.
அவள் எனக்கென பாதிமரணமும் தந்து சென்றாள்.நெடுந்தூரம் போனவள்,
திரும்பி வரவே இல்லை அவள்.
தேடினாலும் கிடைக்காத அவளைத் தேடி என்னவாகப் போகிறது.தனிமையில் இந்த நூற்றாண்டை வாழ்ந்து முடிப்போம்.என்றோ எனக்கெனத் தெரிந்தவள்.
இன்று பொதுவுடமையாகிவிட்டாள்.

சுயாந்தன்.


தனிமை

உனக்கான தனிமையை நீ அனுபவிக்கவில்லை என்றால்,
உனக்கான இரவு இன்னும் பிறக்கவில்லை என்று அர்த்தம்.
தனிமைகள் இரவுகளில் தானாம் எதிரொலிக்கும்.......

பிரமிளின் ஒரு கவிதை- வல்லினம் இதழ் மலேசியா

பிரமிளின் ஒரு கவிதை: சிற்றாய்வு
--இரட்ணேஸ்வரன் சுயாந்தன் •“இன்றைய தமிழ்க்கவிதையின் முன்னோடி பிரமிள் தான். தத்துவச் சிக்கல்களைத் தீர்த்துக்கொண்டு, மரபையும், நவீனத்துவத்தையும் செரித்து முன்னோக்கிப் பாய்ந்தவர் பிரமிள்” என்று தேவதேவன் ஒரு நேர்காணலில் பிரமிள் பற்றிக் கூறியிருந்தார். அவரது கூற்று நியாயமானது என்று பிரமிளின் படைப்புலகமே பறைசாற்றும்.பிரமிள் பற்றிய முன்னுரைகள் இல்லாமலே அவரது கவிதை மீதான சிற்றாய்வைப் பரிசோதித்து விடலாம்.காவியம் என்ற தலைப்பில் பிரமிள் உருவாக்கிய கவிதையின் முடிச்சவிழா யதார்த்தங்களை விமர்சன ரீதியில் கட்டவிழ்க்கலாம். அக்கவிதை பின்வருமாறு;சிறகிலிருந்து பிரிந்தஇறகு ஒன்றுகாற்றின் தீராத பக்கங்களில்ஒரு பறவையின் வாழ்வைஎழுதிச் செல்கிறது.இந்தக்கவிதையை நான் அடிக்கடி  முணுமுணுக்கும்போது ஒரு சந்தத்தை எனக்குள்ளேயே கவிதையின் வரிகள் உருவாக்கிவிடுகின்றன. அந்த அளவுக்கு வரிகளின் நவிற்சி பெறுமதி மிக்கதாயுள்ளது.கவிதையின் உள்ளீடுகளில் புதைமமாகப் படிந்திருக்கும் களிம்புகள் ஏராளம். இக்கவிதை பின்வரும் மூன்று பெரும் சொற்பிரிவுகளால் ஆனது.சிறகிலிருந்து பிரிந்த இறகு.காற்றின் தீராத பக்கங்கள்.ஒ…

கண்ணீரென்றால்......?

கண்ணீரென்றால்......?
=======
கப்பல்கள் மிதக்கட்டும்.
உன் கண்ணீராலான
கடலை நானே விண்டு குடித்துவிடுகிறேன்.யோசித்துப் பார்;
நீர் வற்றியதும்,
'அதுவும் உன் கண்ணீர்'
அவை கப்பல்கள் அல்ல..அது ஒரு அகதிகள் கூடாரம்.
அது ஒரு பறவைகள் சரணாலயம்.
அது ஒரு சிங்கத்தின் குகை.
அது ஒரு நிலத்தின் உணவு.
அது ஒரு நூற்றாண்டின் அடையாளம்.உன் கண்ணீரை
நான் குடிப்பதால்;
நூற்றாண்டுக்கான அடையாளமும்,
உயிர்களுக்கான உறைவிடமும்
எவ்வளவு சாதுர்யமாகக்
கிடைத்து விடுகிறது.ஆனால் நானுன் கண்ணீரைக்
குடிக்க கண்களின்
அகவழியைத் திறந்துகொள்ளு.
கண்ணீரென்றால் உப்பாகத்தான் இருக்க வேண்டுமா?
கண்ணீரென்றால் கன்னங்களில் தான் வழியவேண்டுமா?

சுயாந்தன்.

தமிழ்க் கவிதையின் வெளிகள் விரிவடைகிறதா?- திண்ணை இதழ்

இளங்கோ கிருஷ்ணன், நரன், இசை, மனுஷி, றியாஸ் குரானா, வெய்யில், கண்டராதித்தன், அனார் முதலிய சமகாலக் கவிஞர்களின் கவிதைகள் பற்றிய எனது சிறுபார்வை. இவ்வார திண்ணையில்......
=====
தமிழ்க் கவிதையின் வெளிகள் விரிவடைகிறதா?
=========
"பறவைகளைப் படைத்தபின் கடவுளுக்கு வானத்தை விரிவுபடுத்தும் வேலை வந்து சேர்ந்தது"
-கலாப்ரியா கவிதைகள்.இதுபோன்ற தலைப்புக்களை இடும்போது சமகாலத்தினூடாக பயணிக்கின்ற கவிதையின் சாராம்சங்கள் என்ற அர்த்தத்தில் தான் ஆராயவேண்டும். இருபதாம் நூற்றாண்டில் பிறந்த நான் இருபத்தோராம் நூற்றாண்டிலும் வாழ்கிறேன். இது நூற்றாண்டுகளுக்கு ஒரு பொருட்டல்ல. ஆனால் எனது பார்வையில் இது பெரும் சாதனையாக இருக்கலாம். அதே போல கவிதைகளும் இருக்கமுடியாது. சங்ககால மரபையோ, கம்பன் கால விருத்தப்பாவையோ, பாரதிகால புரட்சியையோ மட்டும் கவிதையில் இன்றும் கூறிக்கொண்டிருக்க முடியாது. மரபை உடைத்து புதுக் கவிதை, நவீனகவிதை என்ற தரத்தில் தமிழ்க்கவிதைகள் படரத் தொடங்கியுள்ளது. நவீன கவிதைகளின் வெளி மேலும் கட்டமைந்துள்ள சில  மரபு உள்ளீடுகளை உடைப்பதாகப் போய்க்கொண்டிருக்கின்றது. அதற்குக் கவிஞர்கள் மட்டுமே காரணமல்ல விமர…