கண்ணீரென்றால்......?

கண்ணீரென்றால்......?
=======
கப்பல்கள் மிதக்கட்டும்.
உன் கண்ணீராலான
கடலை நானே விண்டு குடித்துவிடுகிறேன்.

யோசித்துப் பார்;
நீர் வற்றியதும்,
'அதுவும் உன் கண்ணீர்'
அவை கப்பல்கள் அல்ல..

அது ஒரு அகதிகள் கூடாரம்.
அது ஒரு பறவைகள் சரணாலயம்.
அது ஒரு சிங்கத்தின் குகை.
அது ஒரு நிலத்தின் உணவு.
அது ஒரு நூற்றாண்டின் அடையாளம்.

உன் கண்ணீரை
நான் குடிப்பதால்;
நூற்றாண்டுக்கான அடையாளமும்,
உயிர்களுக்கான உறைவிடமும்
எவ்வளவு சாதுர்யமாகக்
கிடைத்து விடுகிறது.

ஆனால் நானுன் கண்ணீரைக்
குடிக்க கண்களின்
அகவழியைத் திறந்துகொள்ளு.
கண்ணீரென்றால் உப்பாகத்தான் இருக்க வேண்டுமா?
கண்ணீரென்றால் கன்னங்களில் தான் வழியவேண்டுமா?

சுயாந்தன்.

Comments

Popular Posts