Skip to main content

Posts

Showing posts from 2017

நதி

நதி சமதரைகளைத் தேடித்தான் வருகிறது என்பது மடத்தனம்.
அதுதன் கைக்குழந்தையைத் தேடிக்கொண்டிருக்கிறது சமதரைகளில்.
துரதிஷ்டவசமாக அதை எடுத்தவனிடமே  சங்கமமாவதுதான்  அந்தத் தாயின் இயலாநிலை.....
இந்தச் சரணாகதியிலும்  ஓயாது அடிக்கின்றது பெண்மையின் தேடலைகள்.......

மலைகள்- தமிழக இதழ்

1. பூஜ்ஜியங்கள்.ஆகாய இடுக்குகளில்
ஆயிரம் பூஜ்ஜியங்கள்.
மணமான மங்கையின்
ரத்தப் பொட்டுவழி
கரையிறங்கிய செம்பூஜ்ஜியங்கள்.
அவளது தீட்டுக்களைத் தீண்டி ஒரு கோயிலின் கருவறையில்
யாவரும் வணங்கும்
சிலையின் பின்வளையமாகி
எம்மை உற்றுப் பார்ப்பதுண்டு.அப்போதுதான் புதிதாகப்
பிறந்த பூமியின்
கறுப்பிகளும், சிவப்பிகளும்
கண்வெட்டாமல் என்மீது
முதல்காதலை வீசியெறிகின்றனர்.2. உரையாடல்கள்.ஒரு பக்கமும் சிந்திக்க முடியாதபடி ஒவ்வொரு
பக்கமும் உருகிவிடுகிறது.ஒரு பக்கத்தின் நிழலில்
ஒவ்வொரு பக்கத்தின்
உருவும் சதிராடுவதால்
புதுப்பக்கங்கள்
பழைய பக்கங்களை
உரையாட விடுவதில்லை….3. இடமாற்றம்.சதுர நிலவுகள்
வட்ட நினைவுகளில் அழ்ந்தன.
ஒருபோதும் அவை வானத்துக்குள் தம் எல்லைகளை விஸ்தரிப்பதில்லை.சதுரத்தின் நாற்பக்கமும்
கொஞ்சம் கொஞ்சமாக
வேதனைகள் அழுந்தப் பதிந்தன என்று நீள்சதுரமான நட்சத்திரங்கள் விவரிக்கின்றன எங்கோ இருந்து…..இப்படியான நிலவுகளுக்கு
வானத்தில் இடமில்லை என்பதனால்
அணையுடைத்த குளம் ஒன்று ஊரருகிலுண்டு.அங்கே குடியிருந்து
வானத்தையும், பூமியையும்
ஆழத்தொடங்கியது வட்ட நிலவுகள்.
சதுர நினைவுகள் கூடவே துணையிருக்க…..4. தனியறைசுவர்களி…

குளமும் பகிடிவதையும்.

நான் கம்பஸ்க்கு போன ஆரம்ப கால ராக்கிங்' இல் நடந்த சுவாரஸ்யமான சம்பவம்  ஒன்று எனக்கு ஞாபகம் உண்டு. அது இப்போது சுவாரஸ்யமாகவும், அப்போது மிகவும் களியாக்கியதாகவும் இருந்த விடயம். 'குளம்' பற்றிய நையாண்டிகள்."உங்கட ஊர் பேரச் சொல்லுங்கடா?" என்று சீனியர்கள் கேட்கும் போது வவுனியா மாவட்டத்திலிருந்து போகிற நம்மைப் போன்ற மாணவர்களுக்கு ஒரு அசௌகரியம் உண்டு. அதுதான் வவுனியாவிலுள்ள 90 வீதமான ஊர்களின் பெயர்கள் "குளம்" என்பதில் முடிவதாகும்.  உதாரணமாக புதுக்குளம், ஈச்சங்குளம், தரணிக்குளம், தாண்டிக்குளம், மகிழங்குளம், கனகராயன்குளம்,  கோயில்குளம், இப்படி நூற்றுக்கும் அதிகம். அதனைச் சொல்லும்போது சீனியர்களுடைய நகைப்புக்கு ஆளாக வேண்டி வரும்.
இது நிச்சயமாக அவர்களின் பிழையல்ல. அந்த நகைப்பினை மடக்குவதற்கான காரணத்தையும், நம்பிரதேசத்தின் முக்கியத்துவத்தையும், மூலத்தின் தாற்பரியத்தையும் அறிந்திருக்காமை எங்களது பிழையாகும். 
{குறிப்பு- குளம் என்று முடியாத ஊர்களும் இங்கு உண்டு. ஆனால் பேரில் குளம் இல்லையே தவிர ஊரில் ஒரு குளம் நிச்சயமாக இருக்கும்.}"ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்"…

வருகை

அவளின் வருகை பார்த்து தாழ்வாரத்தின் மழை நீரொழுகும் மிகக் குளிர்ந்த மண்ணில், ஒரு தென்னோலையால் அவள்பெயரை எழுதிக்கொண்டிருந்தான் அவன்.
நெருடலான மனதுக்கு மட்டுமே தெரிந்த  எப்போதோ கேட்ட சில பாடல்களை தூரத்து அலைவரிசைகள் ஒலிபரப்பிக்கொண்டிருந்தன. அத்தருணத்தில் வேறு என்ன செய்வது என்ற பிரக்ஞை ஏதுமற்று இருந்த அவனது மொழிக்கு மட்டும்தான் தெரியும், அந்தத் தாழ்வாரத்தில் மழைபெய்து பல ஆண்டுகள் ஆனதென்றும், அலைவரிசைகள் செயலிழந்து சில மாதங்கள் கழிந்ததென்றும்......

சரணடைதல்

நீங்கள் நிராயுதபாணி ஆவதற்குமுன் உங்கள் ஆயுதங்களை எங்கு வைத்தீர்கள் என்றோ,
நீங்கள் ஆயுதங்களைக் களைந்து வைத்துச் சென்ற இடம் புனிதபூமிக்கு அருகாமையானது என்றோ,
அந்தப்புனித பூமியிலுள்ள எந்தக் கடவுளும் 
எந்த நரனுக்கும் யாசகம் அளிப்பதில்லை என்றோ,
அறிந்திருப்பீர்களாயின்,நீங்கள் நிராயுதபாணியாகி இங்கு நிற்கமாட்டீர்கள்....
#..

பிடித்த கவிஞர்

உங்களுக்குப் பிடிச்ச கவிஞர்கள் யாரென்று ஒருத்தர் கேட்கும் போது, நான் ஒரு லிஸ்ட் போட்டன். நகுலன், சுந்தரரராமசாமி, ரமேஷ்-பிரேம், கலாப்ரியா, தேவதச்சன், பிரமிள், மனுஷ்யபுத்திரன், தேவதேவன், ஞானக்கூத்தன், சுகுமாரன் யூமாவாசுகி, நரன், மோகனரங்கன், சேரன், எம்.யுவன், கல்யாண்ஜி, ஆத்மாநாம் என்று பூரணமாகாத ஒரு தொகுதியை அறிமுகஞ்செய்தேன்.அதற்கு அவரது பதில் மிகச் சிறப்பாக இருந்தது. இவர்களில் ஒருவருடைய கவிதையையும் நான் வாசித்திருக்கவில்லை. ஏன் உங்கள் ரசனை மேம்படவில்லையா?. இந்த வைரமுத்து, வாலி, பா.விஜய் கவிதைகளையும் படிச்சுப் பாருங்கள் என்று ஏளனமாகக் கூறிச்சென்றார், அந்த "வெகுசன" மாந்தர்.
என் மனதுக்குள்ள இருந்த ஒரே பதில் ""நான் இவர்களையெல்லாம் வாசிப்பதை நிறுத்திக் கடந்து வந்து நான்கு வருடங்கள் ஆகிவிட்டது"" என்பதுதான்.....மனிதர்களுடன் பேசுவதை நிறுத்திப் பலகாலம் ஆகிவிட்டது, மனிதர்களைக் கண்டாலே ஓடி ஒளிந்து கொள்கிறேன். என்று ஒரு பெருங்கவிஞர் சொன்ன கருத்துத்தான் இப்போது ஞாபகம் வருகிறது. 'வாம்மா துரையம்மா' பாட்டுல கொச்சின் ஹனிபா சொல்ற வசனம் ஒன்டு வரும் "அது யாருன்ன…

சேரனும் கருணாகரனும்.

முறையே இருவரும் அரசர் மற்றும் படைத்தளபதிகள் என்று இந்த ஈழத்துக் கவிஞர்களைப் பற்றி அறியாதவர்கள் நினைக்கலாம். அப்படி நினைப்பவர்களுக்கான விளக்கத்தைப் பின்வருமாறு கூறலாம். அதாவது சேரர்கள் தமிழை விட்டுப் போன கேரளர்கள். கருணாகரன் இலங்கையைக் கைப்பற்றிய உரமான சோழப் படைத்தளபதி. அதைப்போல தான் கவிஞர் சேரனும் ஈழத்தை விட்டகர்ந்த மாகவிஞர். கருணாகரன் ஈழத்தில் மக்களின் யுத்தப் பிரத்தியட்சங்களை யதார்த்தமாக்கித் தன் கவிதைகளில் கனதியான மொழியுடன் இங்கிருந்தே தந்தவர்/தருபவர். இந்த இருவரையும் விட்டுவிட்டு  ஈழத்தின் யுத்தகாலக் கவிதைகளின்  விகாசங்களை ஆராயமுடியாது. சேரனின் கவிதைகளில் யான் முதலில் படித்தது, "மீண்டும் கடலுக்கு" என்ற தொகுப்பிலுள்ள 'மூன்று தெருக்கள்' என்பதாகும். அதேபோல கருணாகரனின் கவிதையில் "ஒரு பயணியின் நிகழ்காலக்குறிப்புகள்" தொகுப்பில் அடங்கும் 'யாருடைய வீடு' என்ற கவிதையுமாகும். இரண்டின் பொதுப்பண்புமே நமது இருப்பு நிரந்தரமற்ற ஒன்றாக இருப்பதை மொழியினால் அடையாளப்படுத்தியதுதான். கவிதைகள் வருமாறு:1. மூன்று தெருக்கள்- சேரன்.
=====
கடவுளரும் பிசாசுகளும்
இணைந்து பு…

காதல்

ஐந்து பெண்கள் குறுக்கிட்டுச் சென்ற வழுக்குப்பாதை போன்றது மனது. அதிகாலை முழுவதும் கனவெழுச்சியிலும், பகலை அண்மித்த வேளையில் துன்பமிகுதியிலும், நள்ளிரவின்  நிர்வாக நேரத்தில் தூண்டில் புழுவாகவும் புரளக் கூடியது. முக்காலமும் இந்த வழுக்குப்பாதையின் ஒற்றை வெளிக்குள் சுற்றிவந்து இறுதியில் பொழுது எந்தமாதிரியான கற்பனைகளை அவிழ்த்துத் தூங்குகிறது என்பதறியாமல் அதே பாதையில் சென்றுவிடக்கூடியது இந்த மனது.....

மழை

பெய்துகொண்டு தானிருந்தது மழை.
மழைக்குள் மூழ்கியது மண்ணும் இராவும்...
எனினும் நிறுத்தப்படவில்லை அதன் துளிகள்.
இப்போது மழைக்குள் மூழ்கிக் கொண்டிருக்கிறது அதன் துளிகள்....
வெளியே வந்த மண்ணும் இராவும் துளியை அணைத்துக் கொண்டது......
எனினும் பெய்துகொண்டு தானிருக்கிறது துளிகள் மழையை.....

குறிப்பு

மிக மோசமாக எழுதப்பட்ட பக்கங்களைத் திருத்திவிட்டு வீடு திரும்பிய பேனாக்களின் குற்றவுணர்ச்சியைக் கூற ஒரு கவிதையேனும் வேணும்.
அவை திருத்திய தண்டனைக் குறிப்புகளாக இருக்கும் பட்சத்தில்.......

சாவனம்

'மயில்தோகை' கடந்துபோன பாதையால்,
நடந்துபோன காதலியின்  பாதச்சுவட்டினை மீளவந்து அள்ளிக்கொள்கிறது 'தோகைமயில்'.....
இதில் எந்தக்
காதலோ,
பார்வையோ,
ஸ்பரிச ஆயாசமோ
இல்லையெனினும்,
மீளவந்து எதையோ அள்ளிக்கொள்வதில் மனிதனைப்போல மயில்களுக்கும் இருந்திருக்கவேண்டும்
ஏதோ ஒரு 'மீட்சியஸ்த்திர சாவனம்'........

காதல் சடுகுடு

மணிரத்னம்'இன் அலைபாயுதே திரைப்படத்திலுள்ள காதல் சடுகுடுகுடு.... என்ற பாடலில் 4.35 நிமிடத்தின் 52 வது செக்கனில் ஒரு Guitar Riffs Instrument இன் ஒலி குறுக்கிடும்.  அதாவது துல்லியமாகக் கூறினால் "அருகில் வந்தால் இல்லை என்கின்றாய்" என்ற வரிக்கு முந்தைய இரண்டு செக்கன்கள்....
இதை இங்கு கூறக்காரணம்:
நமக்குக் கிடைக்கப்போகும் காதலியின் மறுத்துப் பேசுகின்ற குரல்வாகு அதைப்போல இருந்துவிட வேண்டும் என்று அடிக்கடி நினைப்பதுண்டு......
அந்த 52 செக்கன்களுக்குப் பின்னரான அந்தப்பாடலின் அழுத்தம், முந்தைய 50 செக்கன்களையும் திருத்துவது போல இருக்கும்..... ஏறத்தாள மூன்றே செக்கன் வந்த அந்த iInstrument ஒலி...
கிட்டத்தட்ட நல்ல காதலியைப் போல....
அந்தப்பாடலில் அவ்வொலியைக் கேட்டுப் பின்னர் காதலை அனுபவிப்போருக்கு இது புரியும்.....

Descriptive Poem.

தொடர்ச்சியாக ஏன் சேரனின் கவிதைகளையே முகநூலில் பதிவிடுகிறீர்கள் என்று ஒருவர் கேட்டிருந்தார். அது ஏன் என்பதற்கான பதிலை நான் கூறுவதைவிடச் சேரனின் கவிதையே கூறும்.
=====
கேள்.
=====
எப்படிப் புணர்வது என்பதைப் பாம்புகளிடம்.
எப்படிப் புலர்வது என்பதைக் காலையிடம்.
பொறுமை என்பது என்ன என்பதை மரங்களிடம்.
கனவுகளுக்கு வண்ணங்கள் உண்டா என்பதைத் தூக்கத்தில் நடப்பவர்களிடம். கண்ணீர்த்துளிகள் சிறைக்கூடங்களாக மாறியது எப்படி என்பதை அகதிகளிடம்.
பயம் என்பது என்ன என்பதை நடு இரவில் இந்த நகரில் நடக்க நேர்கிற கறுப்புத்தோல் மனிதர்களிடமும் பெண்களிடமும்.
மோகம் முப்பது நாள்கள்தானா என்பதை மூக்குத்தி அணிந்த காதலர்களிடம்.
முழுநிலவில் பாலத்தின் கீழ் உறைந்த பாற்கடலின் பாடும் மீன்கள் எங்கே போய் விட்டன என்பதைக் கார்காலத்திடம். மொழியின் தனிமையிலிருந்து பிறப்பது என்ன என்பதைத் திசை தொலையப் புலம் பெயர்ந்தவர்களிடம்.
துயரத்தின் சாறு பிழிந்த தனிமை எப்படியிருக்கும் என்பதை என் பனிப்பாறையுள் நெருப்பின் உயிர்ச் சுவட்டை எறிந்தவளிடம். அவளிடம் இவளிடம்.
இரவின் கடைசி  ரயிலும் போய்விட்ட பிற்பாடு தண்டவாளங்களும் குளிரில் துடித்துப் ப…

சிதம்பர நினைவுகள்.

லோகத்துல அவரவர் சந்தித்ததும் சந்தித்துக் கொண்டிருக்கும் மனிதர்களின் வகையிது.
1. பாரதியார் வகை.
2. பிரமிள் வகை.
3. நகுலன் வகை.
4. ஒட்டக்கூத்தர் வகை.பிரமிள் வகையினரைப் புரிந்து கொள்ள சற்றேனும் நாளிதழ்களில் வெளிநாட்டுச் செய்தியில் வருகின்ற பகுதிகளையாவது ஓரளவுக்குப் படித்தறிந்திருக்க வேண்டும்.  இல்லையெனில் அவர்கள் சொல்லவரும் கருத்துக்களையும், கோட்பாடுகளையும் புரிந்துகொள்வது எளிதாகவிராது. சதா வெளியூரின் Operation Entebe யையும், உள்ளூரின் Operation Pawan ஐயும் போட்டுக் குழப்பியடித்துக்கொண்டிருப்பர். நகுலன் வகையினர் தனிமைப் பிரியர்களாகவும், சுருங்கக் கதைப்போராகவும் இருந்துவிடுவர். சமயத்தில் இந்தச் சுருக்கத்தினால் உங்களை யாரென்றும் கேட்டுவிடக்கூடிய பேர்வழி. நீங்களெல்லாம் நினைத்துக்கொண்டிருக்கும் சமூகச் "சைக்கோக்கள்" இவர்கள்தான். "எனக்கு யாருமில்லை நான்கூட" என்று Oneway கதைகளை கதைத்தபடி இருப்பர்.ஒட்டக்கூத்தர் வகையினர் எப்போதும் மற்றவரைக் குறை கூறிக்கொண்டும், தூஷணங்களைக் கூட மிக அழகாகக் கவித்துவமாகக் கூறக் கூடியவர்கள்/ கூறியபடியிருப்பர். இவ்வகையினரை நாங்கள் பாடசாலையிலும், வ…

பறவைகள்

பறவைகள் பறந்து போகின்ற திசையின் எதிர்முடிவில் நின்று கொண்டது சூரியன்.
வழியனுப்ப நிலவும், நட்சத்திரங்களும் இன்றியே தம் பயணத்தை ஆரம்பித்திருந்தன.வானத்துக்குக் கீழாகவே தொடர்ந்து பறப்பது பறவைகளுக்கு இடையறாத ஒரு தளர்ச்சியைத் தந்திருக்க வேண்டும். இல்லையேல்
தாழ்வு மனப்பான்மையில் தத்தளித்திருக்க வேண்டும்.
அவ்வேதனையின் களிம்பாக அவற்றின் சிறகுகள் அருகிலுள்ள சிறுபான்மையினரின் குக்கிராமத்தின் குளத்தின் மீது வீழுகின்றன.தொடர்ந்து ஏதோவொரு "சிற்றினங்களின்" நீர்நிலைகள் மீது தம்சிறகுகளை வீசிவிட்டே செல்கின்றன. கழுத்து நெரிக்கப்பட்ட இனங்களின் காயங்களை கண்மாயில் சொல்லிவிட்டு,
மீதமுள்ள தம் நிர்வாணம் மூலமே சூரியனை நெருங்க முனைகின்றன.அதனால் தான் என்னவோ சூரியனின் ஆதித்தூரம் பறவையின் முடிவிலியற்ற பறத்தலால் தீர்மானிக்கப்பட்டிருக்க வேண்டும்.

இளையராஜா

இளையராஜாவின் ஒட்டுமொத்த இசையமைப்புக்களில் மிகமிக உன்னதமான பாடல்களாக நான் உணர்பவை இவைதான். ஆயிரம் படங்களிலுள்ள கிட்டத்தட்ட 4700 பாடல்களில் இந்த 30 பாடல்கள் என்றுமே அழியாத இசைப் பொக்கிஷங்கள். இந்தப் பாடல்களைக் கேட்டிராத ஒருவர் தமிழிசையை அதிகம் தவறவிட்டவராக இருக்கக் கூடும். 1. நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி- ஹே ராம்.
2. ராஜ ராஜ சோழன் நான்- ரெட்டைவால் குருவி.
3. சுந்தரி கண்ணால் ஒரு சேதி- தளபதி.
4. மன்றம் வந்த தென்றலுக்கு- மௌனராகம்.
5. எனக்குப் பிடித்த பாடல்- ஜீலி கணபதி.
6. என்னைத் தாலாட்ட வருவாளா- காதலுக்கு மரியாதை.
7. இளங்காத்து வீசுதே- பிதாமகன்.
8. தென்றல் வந்து தீண்டும்போது- அவதாரம்.
9. பூவே செம்பூவே- சொல்லத்துடிக்குது மனசு.
10. கண்ணே கலைமானே- மூன்றாம்பிறை.
11. என்ன சத்தம் இந்த நேரம்- புன்னகை மன்னன்.
12. நீ ஒரு காதல் சங்கீதம்- நாயகன்.
13. வானவில்லே- ரமணா.
14. நீ தூங்கும் நேரத்தில்- மனசெல்லாம்.
15. கல்யாணத் தேன்நிலா- மௌனம் சம்மதம்.
16. என் இனிய பொன் நிலாவே- மூடுபனி
17. ஊருசனம் தூங்கிடிச்சு- மெல்லத்திறந்த கதவு.
18. ஓ பட்டர்பிளை- மீரா.
19. மாலையில் யாரோ- சத்ரியன்.
20. வளையோசை கலகலகலவென- சத…