Skip to main content

Posts

Showing posts from January, 2017

மரமும் மலரும்

நீயொரு அழகில்லாத மலர்.
அதனால் உன்னைக்
கொய்துவிடாமல் காய்க்க
விட்டிருக்கிறேன். திரும்பவும் நீயொரு
விருட்சத்தை உண்டாக்கி விட்டு
ஆயிரம் பேரை அதில்
வேடிக்கை பார்க்கவிடு மலரே. நீயொரு அழகான மரம்.
அதனால் இன்று உன்
விழுதுகளின் தாழ்விடத்தில்
பெருங்கனவு காணப்போகிறேன். நீ மலராயிருந்த இடம்
மரங்களால் நிரம்பி விட்டது.
நீ மரமாய் மாறிய பின் பூக்கள்
பூப்பதையே நிறுத்திவிட்டன. என் கனவுகள் எல்லாம்
மரமாகவும் மலராகவும்,
நான் நடக்கும் அதோ
அந்த ராஜவீதிகளில்......

# மரமும் மலரும்.

கவிதைகளின் ஆழ்முகம்: Aesthetic View-2.

கவிதைகளின் ஆழ்முகம்: Aesthetic View-2.
======
"கவிதையானது காலாதீதங்களுக்கு இடையே நீண்டு கொண்டேயிருக்கும் மாயச்சங்கிலி" என்று கலாப்ரியா ஓரிடத்தில் கூறியிருந்தார். ஒரு கேள்விக்கான விடையை அவ்வளவு கவித்துவமாகக் கூறியிருந்தார். இந்த பிராணச் சுருக்கம்(For Poetry) காலாவதியாகாத பண்பினைப் படைப்புகள் தோறும் விளக்கி வருகிறது என்றே கூறவேண்டும். அதுவும் கவிதைகளின் படைப்பு நிலையினின்று நோக்கினால் அவ்வுண்மையின் அரங்கேற்றம் தபாற்காரனின் கடிதச் சைக்கிளின் பெல்லைக் கொண்டு கடிதங்களுக்குக் காத்திருக்கும் காதலர்/வாசிப்பவர்களின் இதயத்தை பதைபதைக்கச் செய்யக்கூடியது.  தேவதச்சனின் ஒரு கவிதை;"சுடுகாட்டில்
காய்ந்து கருகி நிற்கும்
செடியில்
உச்சி நோக்கி
உட்கார்ந்திருக்கிறது, நத்தை.
ஆழத்தில், வெகு ஆழத்தில்
நகரும் அது
எந்தத் தீவில் இருக்கிறது
என்று, என்
கண்கள் சொல்லவில்லை."குறைபாடற்ற சொற்கள் (Flawless Verse/Words) கொண்ட இக்கவிதையினை முதல் வாசிப்பில் மாத்திரம் புரிந்து கொள்ள நினைப்பது, நாமாகவே சொல் அடுக்குகளைப் போட்டு மனக் கவிதைகளை குழப்பிக்கொள்வதற்கு ஈடாகும். அதனையே சொல்லாட்சி (Rhetorical) செய்து…

மலை

பெயர்சூட்டப்படாத
மலையொன்று
குயில்களையும்,
காகங்களையும்
ஏற்றிக்கொண்டு
நடுக்கடலுக்குள்
நகர்ந்துபோகிறது.பெயர்வாங்கிவிட்டு
மலை மீளவும்
தரைக்கு வருகின்றது.
சில பாடல்களோடும்.....
பல குப்பைகளோடும்.....

காலம் மையம் கொள்வதில்லை.

காலம் மையம் கொள்வதில்லை.
=======
கடிகாரமுள்ளாக மேகம் நகரத்தொடங்குகிறது.
சில மின்னல்கள்
"ஒன்றுக்கும் பன்னிரண்டுக்கும்"
இடைப்பட்ட தூரத்தை அசாதாரணமாகக் கடந்து செல்கின்றன.நிமிடமுட்களின் வழியே
சொரிந்த நீரினை
அள்ளிப் பூஞ்செடியின்
இலைகளில் சும்மா
வைத்துவிடுகிறேன்.
மணிமுட்களில் வெள்ளம்
வழிந்தோடுகிறது.
அது இரவுகளின் தொடர்ச்சியைத்
தன்னுள் தக்கவைத்து
ஒரு நதியையும்
உண்டாக்கிவிடுகின்றது.கடிகார மையத்தின் அச்சாணி
ஒரு புள்ளியில் நின்றுவிடாது
காலத்தையும், மேகத்தையும்
சுழற்றியபடி ஒரு யுகத்தைக் கடந்துபோகின்றது...
நானெல்லாம் வயதான
சிறுவன்போல இன்றும்
இளநரையுடன் பூஞ்செடிகளுக்கு
நீர்வார்த்துக் கொண்டிருக்கிறேன்.

பெரியன கேட்டல்.

என்னை நான்
வானமாகப் பாவனை
செய்துகொண்டிருந்தேன்.புகையிலிருந்தெழுந்த
சீனப்பெருஞ்சுவரின்
தாழிடப்படாத கதவோடைகள்
என்னைநோக்கி வெளிச்சத்தை வீசிக்கொண்டேயிருந்தது.பாதிச் சூரியனை நிகர்த்த
வான மண்டலம்
என் வானினை நோக்கி
வந்து கொண்டே இருக்கிறது.நிலவும்,
முகிலும்,
தாரகையும்,
சில பறவைகளும்
என்னிடம் ஏதோ
கேட்டுக்கொண்டேயிருந்தன.என்னை நான்
நிலவாயும்,
முகிலாயும்,
விண்மீனாயும்,
பறவையாயும்
பாவனை செய்துகொண்டு
பூமியின் ஆழ்துளை வரை
நகரலானேன்.அங்கும்
ஒருபாதிச் சூரியன்,
வானமண்டலம்,
மற்றும் சில பறவைகள்....

#

நான்கு கவிதைகள்- தமிழகத்தின் மலைகள் இதழில்....

நான்கு கவிதைகள்-மலைகள் இதழ்.1. விபத்து.
===
நெடுஞ்சாலையொன்றில்;
இடதுபக்கம் மட்டும் எல்லா வீதிச்சமிக்ஞைகளும்.
வலதுபக்கம் மட்டும் எல்லா கோயில்களும்.
நடுவீதியால் மனிதர்கள் மட்டும் பயணிக்கின்றனர்.
வாகனங்கள் அவர்களுக்கு மேலால் பறக்கின்றன.தற்போதெல்லாம்
விளம்பரப் பலகைகளில் 
கண்ணீர் அஞ்சலிப் 
போஸ்டர்களைக் காணமுடிகிறது.2. நத்தை நகர்கிறது.
=====
தனியாக அலையும் 
நத்தைக்கு
குருட்டு வீதிகளின் சாளரம்
காற்றைத் திறந்து
விட்டுக் கொண்டிருக்கிறது.பிணச் சாம்பல்களின்
வாசனையில் வந்த 
தென்றல் 
என் வீட்டு ஜன்னலுக்கால் புகுந்து
அகராதியை எரித்துப்
போகிறது.கயிற்றில் காயப்போட்ட
சாரம் ஒன்று
தூரமான வானிலிருந்து வந்த
வாடைகளுடன் உறவாடி
மீளவும் நீரில் நனைகிறது.நத்தைக்கு நான் போர்த்திய
ஈரச்சாரத்தை 
எடுத்த வாடைக்காற்று,
அகராதியின் இறுதிப்பக்கங்களால் தன்னையே வாசித்து நகர்கிறது.எங்களைப் போலத்தான்
நம்மைச் சூழ்ந்தவையும்.
என்ன ஒரு
நாங்கள்///நீங்கள்????.3. தடையதிகாரம்.
====
தீராத 
தீர்த்தம் 
உன் பார்வைகள்.ஏன் அப்படிப் பார்த்துச்
சிரிக்கிறாய்?
நிச்சயமாக அது ஒரு சிரிப்பேயில்லை.நீ எந்த விரல்கொண்டு
என் புகைப்படங்களை
நகம் படாமல்

சுயமரியாதை பற்றி....

நீ புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்தாய்.
ஒரு பழைய வருடத்தின் இறுதியில் 
புதுவருட வாழ்த்துச் சொல்லியிருக்கிறாய்.நீ புதிதாகப் பார்த்த "உலக ஊழி" படம்
பற்றிய கதை ஒன்னும் சொன்னாய்.
முன்பனிக் காலங்களில் முகத்தில் படரும் "பொடுகு" பற்றிச் சொன்ன ஞாபகமுமுண்டு.விமர்சனங்கள் மட்டுமே
உயிர்வாழ்வதாகக் கூறி,
கவிதை எழுதுவதை இத்துடன்
நிறுத்தவும் சொல்லியிருந்தாய்.நீ எனக்கான ஒரு காகிதநிலவை
உன் கரங்களால் செய்ததாகவும் சொல்லியிருக்கிறாய்.நீ கடைசிவரை என்னை
நல்லவனென்றும் நம்பியிருக்கிறாய்.
பிறர் கெட்டவன் என்று சொன்னாலும் கேட்டிருக்கிறாய்.நீ சொன்ன எதையும் நான்
என்றுமே கேட்டதில்லை.
எனக்கு என் சுயமரியாதை
ஒன்றே முக்கியமென்று உன்னை
உதாசீனப் படுத்தியிருக்கிறேன்.நீ புற்றுநோயால் அவதிப்பட்டுக் கொண்டேயிருந்தாய்.பிறகொரு நாளான இன்று......
கல்லறைக்கு அருகில் ஒரு "பிராமணனை" அழைத்து உனக்கான ஆண்டுப் பூஜை செய்வது பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறேன்.....

# "நீயும் என் சுயமரியாதையும்"

மடம்பி

மடம்பி.

நெருப்பினாலான பூமியின்
நீர்ப்பிளம்புகள் தட்டையானது.
நிழல்களாலான குளிர்ச்சியின்
வாடைகள் சதுரமானது.
தூக்கங்களாலான மரணத்தின்
நீள்தல்கள் வட்டமானது.
கண்ணீராலான கனவின்
களிம்புகள் வடிவமற்றது.....நெருப்பு,
நிழல்,
தூக்கம்,
கண்ணீர்
நான்குமே "பிரமிள்" க்குள்
அடங்கக்கூடியது...

# சுயாந்தன்.

கவிதைகளின் ஆழ்முகம்:Aesthetic View-1 கவிதைகளை இரண்டாகப் பிளந்தவர்கள். Poetry Cleft & Indentation

A: கவிதைகளை இரண்டாகப் பிளந்தவர்கள். Poetry Cleft & Indentation.
======
ரமேஷ்-பிரேமின் 'சக்கரவாளக்கோட்டம்' என்ற கவிதை நூலை வாசித்த பின்னர் எதேச்சையாக 'றியாஸ் குரானா'வின் 'சில நினைவின் காலடி' என்ற குறுங்கவிதையினையும் வாசிக்க நேர்ந்தது. நான் வாசித்த றியாஸ் இன் முதல் கவிதை இது என்றுதான் சொல்ல வேண்டும்.
மேற்சொன்னவர்கள் இரட்டையர். கீழுள்ளவர் தனித்த படைப்பாளி. இருவரின் ஒற்றுமை நவீனத்துவத்தைத் தாண்டிய கவிதைகள் எழுதுவது/எழுதியமை. (பின்நவீனத்துவமாகவும் இருக்கலாம்.)"இரண்டாகப் பிளந்த" விடயத்தை கவிதைக்குள் இவர்கள் இருவரும் கையாண்டுள்ளனர். பொதுவாக 'வெட்டியடிக்குது மின்னல்' என்று பாரதியாரின் வரிகளை சாதாரணமாக அனைத்தின் பிளவிலிருந்தும் நாம் உணர்ந்து கொண்டதுண்டு.(Lightning, Valley etc). பிளத்தல்×இரண்டாகப் பிளத்தல் இவ்விரண்டு வார்த்தைப் பிரயோகங்களுக்குள் கவித்துவம் ஒளிந்துள்ளது எனலாம். இவர்களின் கவிதைகள் உண்டாக்கும் இடைவெளியற்ற மூர்ச்சை வேறுவிதமாகவுள்ளது.
(இருவரது  கவிதைகளை வாசிப்பதற்கான Text கட்டுரையின் கடைசியில் தரப்பட்டுள்ளது.) ரமேஷ் பிரேமின் கவிதையில் …

அவரவர் கைமணல்

இந்தப்பதிவு சம்பந்தப்பட்ட பலரை நோகடிக்கலாம். அதற்கு நான் பொறுப்பல்ல. "அவரவர் கைமணல்".
========●
கிளிநொச்சியைச் சேர்ந்த மகேந்திரன் தார்த்திக்கரன் என்ற மாணவன் எள்ளுக்காடு  பிரதேசத்தைச் சேர்ந்தவன் எனவும். அவன் உயிரியல் தொழிநுட்பப் பிரிவில் முதலிடம் பெற்றுள்ளான் எனவும் இணையச் செய்திகள் வாயிலாக அறியக் கிடைத்தது. இதைத் தாண்டி அவனுள் இருந்த உள்ளுணர்வின் வெளிப்பாடு ஒன்று பல கிரந்தக் காரர்களின் நடிப்பு முகத்தை வெளிக்கொணர்ந்துள்ளது. அதிபர் தன்னை "உருப்படமாட்டாய்" என்று சொன்ன வாசகம் தன்னை உயிர்த்தெழ வைத்தது என்ற கோணத்தில் ஒரு குறுஞ்செவ்வியும் வழங்கியிருந்தான். அதைச் சிலர் கடிந்திருந்தனர். ஒரு மாணவன் எப்படி ஆசிரியரைக் குறைகூறலாம் என்பது போல. இது ஒன்றும் "குறைகூறல்" அல்ல.
நமது சமூகத்தின்
அவலம்,
அபத்தம்,
அவநம்பிக்கை,
கேவலமான கேடு,
தரித்திரம். நியாயப்படி பார்த்தால் இப்படிப்பட்ட ஆயிரம் தார்த்திக்கரன்கள் எங்கள் சமூகத்தில் உள்ளனர். பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், சிற்றூழியர்கள் முதற்கொண்டு அனைவருமே ஒரு மாணவனின்,
1. வதிவிடப் பின்புலம்.
2. ஜாதி அமைப்புக்கள்.
3. அரசியல்…