Skip to main content

Posts

Showing posts from February, 2017

கம்பீரமும், தீர்க்கதரிசனமும்; அ.முத்துலிங்கம் எனும் கதையாளன்

கம்பீரமும், தீர்க்கதரிசனமும்; அ.முத்துலிங்கம் எனும் கதையாளன்சொல்வனம் தமிழக இதழில்.....

நல்ல கதை என்பது எலியின் உயிர்வாதையையும்,
பூனையின் கொடும்பசியையும் ஒரே சமயத்தில் சொல்வதாகும்.
-யாரோ-

சிறுகதை படிப்பது கம்பிமேல் நடப்பதைப் பார்ப்பது போன்றது. அதையே எழுதமுனைவது கம்பிமேல் நடப்பதற்கே ஈடானது என்று ஒருவர் சொன்ன கருத்து முத்துலிங்கத்தின் சிறுகதைகளை வாசிக்கும் போது ஞாபகம் வருகிறது. அசுத்தமான சிந்தனைகள்(Impure Thought) கதாசிரியனின் கரங்களில் அற்புதமாக மாற்றமடைகிறது. அதுவே பின்னாட்களில் Immortal கதைகளாகவும் ஆகிவிடுகிறது. புதுமைப்பித்தனின் ‘பொன்னகரம்’ சிறுகதை அதற்குத் தக்க சான்றுபகரும்.கதாசிரியர், கட்டுரையாளர், கல்வியியலாளர், நேர்முகவாளன் என்று முத்துலிங்கத்தின் இலக்கியப் படைப்பாளுமை பன்முகம் கொண்டது. இவரது சிறுகதைகள் மீது அநேகமானோருக்குத் தனிவிருப்புண்டு. அதில் நானொன்றும் விதிவிலக்கானவனல்ல. ஈழத்தவர், உலகம் சுற்றிய நாடோடி என்பதைத் தாண்டி இவர்தம் அனுபவப் பின்னணி அவரது கதைகளில் சதா ஓங்கி ஒலித்துக் கொண்டேயுள்ளது. மிகைப்படுத்தியும், யதார்த்த நியதிக்குள் அடங்கிவிடுவதுமான பல சிறுகதைகள் முத்துலிங்கத்தி…

துருவங்கள் பதினாறு

துருவங்கள் 16 எனும் "பூமரங்"- D16
======
ஆரண்ய காண்டம், ஜிகர்தண்டா இந்த இரண்டு கிரைம் (Genre) திரைப்படங்களுக்குப் பிறகு மிகவும் கவனத்தை ஈர்த்த படம் துருவங்கள் பதினாறு என்றே கூறவேண்டும். கிரைம் படத்துக்கான அடிப்படைத் தேவைகள் பின்வருமாறு அமையும். (சில விதிவிலக்கு)
1. அங்கலாய்க்க விடாத கதையுக்தி.
2. பின்னணி இசை.
3. முக்கிய கதாபாத்திரம் ஒன்றின் அபரிமிதமான நடிப்பு/ மிகையற்ற நடிப்பு.
4. அறிவார்ந்த தொழிநுட்பங்கள்.
5. சிந்திக்கத் தோன்றும் முடிவு.துருவம் என்பது "ஒரு கோளின்
சுழலச்சின் இரு முனைகள்" என்று கருத்து. வட, தென் துருவங்களைத் தான் அநேகமாகப் பிரதான கருத்தில் கொள்வதுண்டு. இங்கும் அப்படித்தான் இருவர் பிரதான இடம் பெற, ஏனைய பதின்நான்கு பேரும் ஓரளவுக்கு கதையுடன் தொடர்புற்றே நகர்கின்றனர். ஆனால் அந்த ஓரளவு முன் சொன்ற இருவரின் பங்கின் பாதி என்றும் கருதலாம்.  குற்றம் எனும் அச்சில் சுழலும் பதின்நான்கு பேரின் துருவமும் உவமித்து "துருவங்கள் பதினாறு" உருவாகியுள்ளது. "Life can be Unpredictable" இந்த வசனம் திரைப்படத்தின் ஓரிடத்தில் இடம்பெற்றுள்ளது.  அதனையே அதன் ம…

கவிஞனுக்கான சினிமா

கவிஞனுக்கான சினிமா
வல்லினம் மலேசிய இதழில் பிரசுரமானது.தலைசிறந்த ஒரு கவிஞனைப்பற்றிய முழுநீளப் படம் எடுத்தல் என்பது சில இலக்கிய நியதிகளுக்கும், கவிதைசார்ந்த உள்வாங்கலுக்கும் உட்பட்டே அமைதல் வேண்டும் என்பது பலரது கருத்தாகும். (தீவிர இலக்கியவாதிகள்) குறிப்பிட்ட ஒரு கவிஞரைப் பற்றிய பட ஆக்கங்களில் அவர்தம் வாழ்க்கை வரலாறு என்பது தவிர்க்க முடியாத, அதேநேரம் அவரது படைப்புக்களை திரையில் எவ்விதத்தில் பிரயோகிப்பது என்ற விவாதம் ஒவ்வொரு Filmmakers இடமிருந்தும் எழக்கூடும். அதுவும் தமிழில் பாரதி போலொரு கவிஞனாயினும், ஸ்பானிஷில் நெருடாவின் கதையாயினும் இந்த ஆழமான விவாதம் வேரோடிக்கொண்டேயிருக்கும்.ஒவ்வொரு கவிஞனையும் இருக்கும்போது யாருமே கண்டுகொள்வதில்லை. அதற்கான காரணம் அவன் இருக்கிறான் எனும் அசட்டையும், நமது சமூக-கல்வி-பொருளாதார அடிப்படையிலான வாழ்க்கை முறையும் எனலாம்.  அதுவே ஒரு கவிஞனின் மரணத்தின் பிற்பாடு அவனது படைப்புகள், வரலாறு, அந்தரங்கம் என இன்னோரன்ன விடயங்கள் தோண்டியெடுக்கப்பட்டு மிகைப்படுத்தப்படுவது இயல்பாகும்.கவிஞர்களைப் பற்றிய பல திரைப்படங்கள் இதுவரை வெளியாகியுள்ளன. அவற்றுள் சில சித்திரங்கள் முக்க…