Skip to main content

Posts

Showing posts from January, 2018

ஆண்-பெண்

இன்னும் திருமணமாகாத பெண்கள் இதனைப் படித்து ஆணாதிக்கத்துக்கு எதிரான தமது நிலைப்பாட்டை எதிர் மனநிலையுடன் அணுகலாம். திருமணமான பெண்கள் படித்தால் இருக்கின்ற கணவன் தமக்குச் செய்வது அப்பட்டமான ஆணாதிக்க செயற்பாடுதான் என்று அவனை நோக்கித் தாக்குதல் கணைகள் தொடுக்கப்பட்டாலும் வியப்பில்லை. டைவர்ஸ் செய்து விட்டுத் தனியே இருந்தால் என்ன என்ற "புரட்சிகர" சிந்தனைகள் பெண்களுக்காகவே கூறப்படுகிறது. ஆக மொத்தத்தில் பெண்கள் கட்டாயம் படிக்கவேண்டிய புத்தகம். ஆண்கள் படித்துத் தம்மைத் தாமே திருத்திக் கொள்ளவும் புத்தகம் சொல்கிறது. மேலும் இதிலுள்ள பதினாறு கதைகளும் பெண்களையும், குடும்பத்தையும் பற்றிய அவர்களது நியாயங்களைச் சொல்கிறது. இதில் ஒரு கதை கூட எனக்குப் பிடிக்காமல் போனதுதான் ஆச்சரியம்தான். எல்லாம் சீரியல்கள் போலவும் பெண்ணியப் பிரச்சாரம் போலவும் கடுப்பேத்தியபடி உள்ளதுதான் இதற்குப் பிரதான காரணம். "அம்மா ஒரு கொலை செய்தாள்", "காட்டில் ஒரு மான்" இந்த இரண்டு கதைகளைத் தவிர வேறெதுவும் அங்கு சரியான புரிதலில் இல்லை. இவையிரண்டும் தமிழ்ச்சிறுகதையில் முக்கியமானவை. மிகுதி எல்லாம் தன்னிலை சார்…

நான் நானாக ஒரு ஜீவிதகாலம்

நானறிய ஒருத்தன் எட்டுப் பெண்களைக் காதலித்தான். எல்லோரும் அவன் ஏழு பெண்களை ஏமாற்றியதாகக் குறை சொன்னார்கள்.
நான் எனக்குள் நினைத்துக்கொண்டேன், இவனால் எப்படி முடிந்தது ஒரே ஒரு மனத்தை வைத்துக்கொண்டு எட்டு மனங்களை வென்றுவிட என்று. அப்படியென்றால்,
"இந்த மனதை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்யமுடியாது" என்று, நகுலன் சொன்னதெல்லாம் பொய்யா????
இப்படிச்சொன்ன நகுலன்தான், "நான் நானாக ஒரு ஜீவிதகாலம்" என்றும் சொல்லியிருந்தார். 
ஆக, அவன் வாழ்ந்ததும் அந்த ஜீவிதகால வாழ்க்கையின் ஒரு பாகமாகுமா???

இந்த நகரத்தில் நகுலன் என்ற பெயரில் யாருமில்லை

ஒரு பிரியமான கூடலுக்கு அப்புறம் அதை இரட்டிக்கிறதுக்கான வழி, அடுத்த கூடுகையை ஒத்திப் போடுறதுதான்.
-ஆத்மார்த்தி. "இந்த நகரத்தில் நகுலன் என்ற பெயரில் யாருமில்லை" என்ற ஆத்மார்த்தியின் கதையை வாசிக்கும் போது சில இடங்கள் எனக்கு நெருக்கமாகவே இருந்தது. புத்தகம்- பிரயாணம்- நகுலன் என்ற மூன்று புள்ளிகளுக்குள் இக்கதையை உருத்திக் கொட்டலாம். ஜெயமோகன், சாரு நிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன், மனுஷ்யபுத்திரன், நகுலன் என்று தமிழின் மிகச்சிறந்த எழுத்தாளர்களைக் கதாபாத்திரங்களுடன் கொண்டு செல்கிறார். சில எழுத்தாளர்களும் படைப்புக்களும் ஆங்காங்கே பட்டியலிடப்படுகிறது. முன்நால்வரையும் விட்டுவிட்டு நகுலனைக் கொண்டே கதையை உச்சத்துக்குக் கொண்டு செல்கிறார். தீவிர இலக்கியம்- வெகுஜன இலக்கியம் என்ற இருவேறான மனநிலைகள் முற்பாதியிலும், நகுலன் போன்ற தீவிர இலக்கியவாதி மீதான முக்கியத்துவம் பிற்பாதியிலும் வருகிறது. இடையிடையே தர்க்கங்கள் நிகழ்கிறது. எனக்குள்ள சந்தேகம் இது எந்த வகையான கதை என்பதேதான். இது கதையா அல்லது கதையாக உருவகிக்கப்பட்ட அழகியல் கட்டுரையா என்பதுதான். காலத்தையும் ஞாபகத்தையும் வைத்துக்கொண்டு ஆத்மார்த்தி தரும…

அழகிய அசுரா

டி.இமான் கம்போஸிங்ல வந்த உருப்படியான பாடல்களில் ஒன்று என்றால், அது அவர் ஆரம்ப காலத்தில் இசையமைத்த "அழகிய அசுரா" பாடல் தான். அவர் கொம்போஸிங்கைவிடப் பாடகியின் குரல் "தாராளமயமாக" இருக்கும். அதுதான் கலையின் அடிப்படை என்றும் தோன்றியது. அந்தப் பாடலைப் பாடிய "அனிதா" என்ற பெயர் உச்சபட்சமாகப் பிடிக்கத் தொடங்கியது எல்லாம் அதன் பின்னர்தான். பாரதிக்குக் கண்ணம்மா போல. நகுலனுக்குச் சுசீலா போல. நீண்டகாலம் அனிதாவின் அடுத்த பாடலுக்காகக் காத்திருக்கிறேன். ஆனால் அவர் இன்னும் பாடாதிருப்பதுதான் பெரும் வியப்பாக உள்ளது. அனிதா இசையை வெறுத்தொதுக்கி விட்டாரா என்ன????

சிவாஜி கணேசனின் முத்தங்கள்

நீங்கள் கவிஞர் இசையின் (கவிதை) வரிகளைப் படித்துள்ளீர்களா?. இல்லையென்றால், உங்களுக்குள்ளும் உங்களுக்கு வெளியிலும் இருக்கின்ற அற்பத் தனங்களை நீங்கள் அறிந்திருக்கமாட்டீர்கள் என்றே அதற்கு இலக்கியத்தில் இன்னொரு பொருள் இருக்கிறது. கவிஞர் இசையின் "சிவாஜி கணேசனின் முத்தங்கள்" தொகுப்பையும், வேறு சில கவிதைகளையும் வாசித்த பின்பு மேற்கூறிய கருத்து எனக்குள் தோன்றியது. கவிதை என்பதே அற்பத் தனங்களால் ஆன ஒரு இலக்கிய மிடுக்குத்தான். அதனை கடுமையான பயிற்சியின் மூலம் கைக்கொணர வேண்டும் என்று நினைப்பது நீங்கள் எழுதிய கவிதைகளை அற்பமாக்கிவிடும். இசையின் கவிதைகளில் அநேக இடங்களில் இருப்பது அவருடைய அற்பத்தனங்கள்தான். ஆனால் அவை மொழிவயப்படுகையில் அவ்வரிகள் மிக மிடுக்காகின்றன. இசையின் வரிகளைக் கவிதைகள் என்று சொல்வதில் உடன்பாடில்லை. அது வெற்று வார்த்தைகளால் ஆன உன்னத மொழிச்செயற்பாடு. அதற்குள் சுவர்ணலாதா, அனுராதா ஸ்ரீராம், எஸ்.பி.பி, இயேசு, ஒபாமா, இளையராஜா, ஆன்ட்ரியா, வைக்கம் முகமது பஷீர், சிவாஜி கணேசன், குரங்கு, வீட்டுநாய், கைக்கிளை-பெருந்திணை என்று பல விடயங்கள் விசித்திரமாக வந்து போகும். அதற்கும் கவிதைகளு…

பான் கி மூனின் ருவாண்டா

தம் கட்டிக்கொண்டு அண்மையில் அகரமுதல்வன் எழுதியிருந்த "பான் கி மூனின் ருவாண்டா" கதைகள் தொகுப்பை வாசித்திருந்தேன். மொத்தமாகப் பத்துக் கதைகள் இருந்தது. இரண்டு விதமான காலங்களைக் கதைகள் உள்ளடக்கியது.
1. Post War.
2. Pre War.
இந்த இரண்டின் காலச் சூழலை உள்ளடக்கிய பத்துக் கதைகளில், Post War மனநிலையில் இருந்து எழுதிய கதைகள் அழிவைத் திருத்திக் கொள்ளும் திடமின்றி, Pre War காலத்தைய புலிகளின் வீர தாளங்களை ஞாபகமூட்டி உசுப்புவதாகவும் அமைகின்றது. பல இடங்களில் புலிகளின் படுகொலைகள் நியாயப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு பக்க நியாயங்கள் கூறப்பட்டுள்ளது. "சங்கிலியன் படை" என்ற கதை அவ்வகையானது. இதிலுள்ள பத்துக்கதைகளில் ஒரே சிறுகதைதான் மிகச்சிறந்த வடிவத்தையும், கதைக்கான ஏனைய வசதிகளையும் பெற்றுள்ளது என்று நினைக்கிறேன்.
அது "முயல் சுருக்கு கண்கள்" என்ற கதை. ஏனைய ஒன்பது கதைகளிலிருந்து மாறுபட்ட கதையாகவே இது உள்ளது. ஏனைய கதைகள் அரசியல் பிரசார உள்ளடக்கம் கொண்டவை. ஆனால் இந்த ஒன்று மிக அற்புதமாக எழுதப்பட்டுள்ளது. பத்துக் கதைகளின் சுருக்க வகைப்பாடுகளாக; 1. பெயர்- இந்தியாவிலுள்ள ஈழ அகதிகளின் பாலியல…

எழுத்தாளர் எஸ்.ரா நேர்காணல் :எனது கேள்வி

எழுத்தாளர் எஸ்.ராவிடம் சுருதி டிவி நேர்காணலுக்காக ஈழ இலக்கியம் பற்றி ஒரு கேள்வியைக் கேட்டிருந்தேன். அந்தக் கலந்துரையாடலில் அவரளித்த பதில்களில் நிறையவே உடன்பாடுகளுள்ளன. ஒரு சில மறுப்புக்களும் இருக்கின்றன. மேலதிகமாக சில தகவல்களை அ.முத்துகிருஷ்ணனும் இறுதியில் பகிர்ந்திருந்தார். கேள்வியும் பதிலும் கீழேயுள்ளது; 1.எனது கேள்வி: தமிழகப் படைப்பிலக்கியம்- ஈழப் படைப்பிலக்கியம் இவை இரண்டுக்கும் இடையில் உள்ள ஒற்றுமை வேற்றுமை என்று நீங்கள் கருதுவது என்ன?. ஈழ இலக்கியம் தமிழக இலக்கியத்தின் பின்தொடர்ச்சிதான் என்று கருதுகிறீர்களா? இல்லையென்றால், ஈழத்து இலக்கியங்களின் தனித்துவம் என்று எதனைக் கூறுவீர்கள்?. எஸ்.ரா பதில்: ஈழத்து இலக்கியம் எப்போதுமே தனித்துவமுடையதுதான். தமிழில் எழுதப்பட்டிருந்தாலும் கூட ஈழ இலக்கியத்துக்கென்று தனி மரபு இருக்கிறது. தனித்துவம் இருக்கிறது. தனி அடையாளம் இருக்கிறது. காத்திரமான படைப்பாளிகள் எல்லாக் காலகட்டத்திலும் எழுதி வருகிறார்கள். இன்றைக்கு அதிலும் கூறிப்பாக சமகாலத் தமிழிலக்கியத்தில் ஈழ இலக்கியம் என்பது அதனுடைய ஒரு தனித்துவமான முகம் என்றே கூறுவேன். தமிழிலக்கியத்தை தமிழகத்தை அவ…

ஈழம் பற்றிய அரசியல்

ஈழம் பற்றிய அரசியல் விவகாரங்களுக்கு வெளியிலிருந்து எழுதும் தமிழக எழுத்தாளர்களில், ஜெயமோகன், எஸ்.வி ராஜதுரை போன்றவர்களின் புரிதலை விட யமுனா ராஜேந்திரனின் புரிதல் நம்பகமானது என்று இந்த நூலின் மூலம் அறியமுடியும். இந்திய ஞானத்தைக்கொண்டு ஈழம் பற்றிய ஜெயமோகனின் புரிதல் கட்டுரைகள் மேலோட்டமானவை. அல்லது அது வெறும் இந்தியப் பெருந்தேசிய அர்த்தத்தில் இருந்து ஈழ அரசியலை அணுகுபவை என்றும் கருதலாம். ஆனால் இந்நூலின் கட்டுரைகளில் ராஜேந்திரன் தான் சார்ந்துள்ள மார்க்சீயக் கோட்பாட்டு நிலைகளையும் விமர்சிப்பதுடன், ஈழம் பற்றிய சகலவிதமான அரசியல் நியாய- அநியாயங்களையும் விமர்சனத்துக்கு உட்படுத்தத் தவறவில்லை. விடுதலைப் புலிகளை இந்த அளவுக்கு விமர்சன நோக்குடனும் நியாயப் பாடுகளுடனும் விமர்சித்த கட்டுரைகள் தமிழ் எழுத்துலகில் குறைவுதான். புலிகளின் சரி-தவறுகள் எல்லாமே பட்டியலிடப்படுகின்றன. மிக முக்கியமாக உலகப் போராட்ட இயக்கங்களின் வரலாறுகளுடனும் கோட்பாடுகளுடனும் விரிவாக ஆராய்கிறது, பின் சோவியத் போக்குகளையும், பின் செப்டம்பர் சம்பவங்களையும் புலிகள் புரிந்து கொள்ளாமையே அவர்களது வீழ்ச்சிக்கு பிரதான காரணமானது என்பது கட்ட…

Le Trio Joubran

பலஸ்தீனத்திலும் அரேபிய தேசத்திலும் கருவி இசைக்காகப் பிரபலமாக அறியப்பட்டவர்கள் ஜேப்ரான் சகோதரர்கள். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுடைய மஜாஸ் (Majaz) மற்றும் தமாஷ் என்ற இரண்டு அல்பத்தையும் கேட்டிருக்கிறேன். Oud என்கிற அரேபியப் பாரம்பரிய இசைக்கருவியின் ஓசைகளால் முழு அல்பத்திலும் நிரம்பியிருந்தது. அதன் ஒலிகளை அழகியல் ரீதியில் அன்று உணரமுடிந்ததே தவிர, அதற்குள் வெளிப்படும் உணர்வுகளை வெறும் யூகத்துடன் விட்டுவிட்டேன். அண்மையில் மஹ்முத் தர்வீஷ் இன் பலஸ்தீன மொழிபெயர்ப்புக் கவிதைகளின் தொகுப்பைப் படித்த பின்னர் இந்த Le Trio Joubran சகோதரர்களின் இசையானது அவர்களது பாரம்பரிய பலஸ்தீனத்தின் குறியீட்டு வெளிப்பாடுதான் என்று கொஞ்சம் புரிந்து கொள்ளமுடிகிறது. அதனை மீண்டும் கேட்கவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கியது அக்கவிதைகள். அநேகமான நாடுகளின் போராட்டங்களை இலக்கியம், வரலாறு மற்றும் சினிமாக்கள் மூலமும்தான் அறிந்திருக்கிறேன். பலஸ்தீனத்தின் போராட்டங்களை அங்குள்ள மக்களின் ஏதோ ஒரு போராட்ட தாகங்களைப் பிறர் உணர்ந்துகொள்ள அவர்கள் இசையையும் ஒரு கருவியாகச் சர்வதேச ரீதியில் பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் ஜேப்ரான் …

"சிதைவுகளின் ஒழுங்கமைவு: சில புலியெதிர்ப்புப் பிரச்சனைப்பாடுகள்"

அனோஜனின் கட்டுரை வாசிக்கமுடிந்தது. அந்தக் கட்டுரைக்கு "சிதைவுகளின் ஒழுங்கமைவு: சில புலியெதிர்ப்புப் பிரச்சனைப்பாடுகள்" என்றே அவர் தலைப்பை வைத்திருக்கலாம்.
அவரும் அவரது புலி எதிர்ப்புக் கூட்டாளிகளும் அருமையாகவே இந்தக்கட்டுரையை விமர்சனமயப்படுத்தியும் திரிபுபடுத்தியும் எழுதியுள்ளனர். இந்தக் கட்டுரையின் விமர்சன யுக்தி பாராட்டுக்குரியது. ஆனால் உள்ளடக்கம் முழுமையாக நம்பகமானதில்லை. உதாரணமாக தொடக்கத்தில் வைத்தே தர்க்கத்தை ஆரம்பிக்கலாம். "இரண்டாயிரங்களின் பின்னர் தமிழில் நாவல்களே எழுதப்படவில்லை" இப்படி லஷ்மி மணிவண்ணனின் கருத்தை முன்வைத்தும் அதனை ஆதரித்துத் தொடங்கிய அனோஜன்தான் சில நாட்களுக்கு முன்பு ஒரு பட்டியல் போட்டார். பின்வந்த விவாதங்களில் சில சலசலப்புக்களைச் செய்தார். அதில் இரண்டாயிரங்களில் வந்த நல்ல நாவல்களையும் பரிந்துரைத்தார். ஆனால் இன்று லஷ்மி சரவணகுமார் மீதான வெறுப்பை உமிழ புலம்பெயர் புலி எதிர்ப்பு வாதிகளுடன் சேர்ந்து கள்ளத்தனம் ஆடுகிறார். அதிலும் குறிப்பாக புலிகள் சாதி வெறியர்கள் எனவும், ஷோபா சக்தி போன்றவர்கள் பிறப்பால் பஞ்சமர்கள் தலித்துகள் என்ற கட்டுக்கதைகளும் அ…

வான்கா வரைந்த ஓவியம்

மனநோய் காரணமாகத் தற்கொலை செய்துகொண்ட வான்கா வரைந்த ஓவியம் இது. கரடுமுரடுத் தன்மைகொண்ட பொலார்ட் மரங்களை நடுவிலும் அதன் இருமருங்கிலும் அநாதையாக மனிதர்கள் தனியே நடந்து செல்வதுமான ஓவியம். உணர்வெழுச்சிக் காலம் முடிந்து றியாலிசம் ஆரம்பித்த 19ம் நூற்றாண்டு காலத்தைய ஓவியம். உற்று நோக்குகையில் தனிமையுணர்வைப் பரப்பும் ஓவியம். இதைப் பற்றிப் பலர் பக்கம் பக்கமாக எழுதியுள்ளனர். அந்தளவுக்கு ஓவியனின் மனோபாவமும் அவனது சூழலும் இங்கு பரவியிருக்கிறது என்பது அவர்கள் வாதம். மந்தையோடு மந்தையாக ஒரு மனிதன் போவது ஒருபுறம். மறுபுறத்தில் ஒரு பெண். அவள் உயிரினங்களற்றுத் தனியே செல்கிறாள். இருவர் பயணிக்கும் வெளி விரிய வாய்ப்புள்ளது. தரிப்பிடம் இல்லாத பயணம். இயற்கை தனது ஆன்மாவை தனக்குள் ஒளித்துவைத்து அவர்களை நகர்த்துவதாகவும் கருதலாம். நோலனின் டன்கிர்க் திரைப்படத்தில் பல காட்சிகளில் இவ்வோவியத்தின் சாயல் வெளிப்பட்டது. ஓவியத்தை இயங்கும் காட்சிக்கு உட்படுத்தும் நுணுக்கம் சினிமாவில் சில கலைஞர்களால் புகுத்தப்பட்டுள்ளது. அதில் நோலனும் ஒருவர் என்று நினைக்கிறேன். இந்த ஓவியத்தின் மீதான தெளிவான பார்வை என்பது முடிவற்ற வெளிக்கா…