வான்கா வரைந்த ஓவியம்



மனநோய் காரணமாகத் தற்கொலை செய்துகொண்ட வான்கா வரைந்த ஓவியம் இது. கரடுமுரடுத் தன்மைகொண்ட பொலார்ட் மரங்களை நடுவிலும் அதன் இருமருங்கிலும் அநாதையாக மனிதர்கள் தனியே நடந்து செல்வதுமான ஓவியம். உணர்வெழுச்சிக் காலம் முடிந்து றியாலிசம் ஆரம்பித்த 19ம் நூற்றாண்டு காலத்தைய ஓவியம்.
உற்று நோக்குகையில் தனிமையுணர்வைப் பரப்பும் ஓவியம். இதைப் பற்றிப் பலர் பக்கம் பக்கமாக எழுதியுள்ளனர். அந்தளவுக்கு ஓவியனின் மனோபாவமும் அவனது சூழலும் இங்கு பரவியிருக்கிறது என்பது அவர்கள் வாதம்.
மந்தையோடு மந்தையாக ஒரு மனிதன் போவது ஒருபுறம். மறுபுறத்தில் ஒரு பெண். அவள் உயிரினங்களற்றுத் தனியே செல்கிறாள். இருவர் பயணிக்கும் வெளி விரிய வாய்ப்புள்ளது. தரிப்பிடம் இல்லாத பயணம். இயற்கை தனது ஆன்மாவை தனக்குள் ஒளித்துவைத்து அவர்களை நகர்த்துவதாகவும் கருதலாம்.
நோலனின் டன்கிர்க் திரைப்படத்தில் பல காட்சிகளில் இவ்வோவியத்தின் சாயல் வெளிப்பட்டது. ஓவியத்தை இயங்கும் காட்சிக்கு உட்படுத்தும் நுணுக்கம் சினிமாவில் சில கலைஞர்களால் புகுத்தப்பட்டுள்ளது. அதில் நோலனும் ஒருவர் என்று நினைக்கிறேன்.
இந்த ஓவியத்தின் மீதான தெளிவான பார்வை என்பது முடிவற்ற வெளிக்கான எக்ஸிஸ்டென்ஷியலிசமா என்ற கேள்வியேயாகும். அதனைத்தாண்டி இதற்குப் பக்கக் கணக்கில் கருத்துக்கள் தேவையற்றது.
ஓவியம்: Pollard Birches.
பி.கு: பொலார்ட் மரத்தின் சாயலில் இங்குள்ள மரங்களை நாம் கிளுவை என்று கூறுவதுண்டு.




Comments

Popular Posts