Skip to main content

Posts

Showing posts from February, 2018

கடல்புரத்தில்: கடலின் தவிப்புக்கான ஆதாரம்.

ஒரு காயல் கிராமம். அங்கு நிறையக் குடும்பங்கள். ஏராளம் வாழ்க்கை. பரந்த ஒரேயொரு கடல். மணப்பாடு என்ற கடல் கிராமத்தைப் பற்றிய கதை. கடல்வாழ்க்கை பற்றிய எழுத்துச் சித்திரங்களில் வண்ணநிலவனின் கடல்புரத்தில் நாவல் மிக முக்கியமானது. அளவில் பெரிதாக இல்லாமல் காயல் வாழ்க்கையின் நெழிவு சுழிவுகளை அவ்வளவு அழகாகக் காட்டிய நாவல். கிறிஸ்த்தவ மீன்பிடிக் கிராம மக்களின் கலாசாரம், முரட்டுத்தனம், குடி, ஒழுக்கம், கடலுக்கும் அவர்களுக்குமான அன்னியோன்யம், காதல், காமம், பரிவு என்று கதை அத்தியாயம் அத்தியாயமாக நகர்கிறது. எல்லா அத்தியாயங்களிலும் அன்பிற்குள்  சர்வமும் ஒரு பொழுதுக்கு அடங்கிப்போகின்றதைக் காணமுடியும். குரூஸ் மைக்கல், பிலோமி, மரியம்மை, செபஸ்தி, ரஞ்சி, ஐசக், சாமிதாஸ் முதலிய கதாபாத்திரங்களுக்குள் கதை நடக்கிறது. இதில் பிலோமி என்ற பாத்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அவள் வழியேதான் வண்ணநிலவன் தான் சொல்லவந்த விடயத்தைங் சொல்கிறார். அவர் கூறவந்த பிரதான விடயம் இடையறாத அன்பும் மனிதர்களின் அதிசயமும் என்றுகூடக் கூறலாம். கதாபாத்திரக்களின் வழி கதையைப் பகுக்கக்கூடிய மிக நுட்பமான எழுத்து. அகங்காரம்…