Skip to main content

Posts

Showing posts from March, 2018

முஸ்லிம்களின் மீதான கண்டிக்கலவரம் பற்றிய இலக்கியப் பதிவு ஒன்று.

உமையாழ் என்கிற முகமட் எழுதிய f=ma என்ற கதையைப் போல வண்ணநிலவன் இஸ்லாமிய சமூகத்தின் உள்பிரச்சனைகள் பற்றி 1986 இல் "சமத்துவம் சகோதரத்துவம்" என்றெழுதிய கதை இப்போது ஞாபகத்துக்கு வருகிறது. முகமட்டின் இக்கதையைப் பற்றிப் பலர் பல விதமாகப் பேசியுள்ளனர். இது வேறு ஒரு விதமாக இருக்கும் என்று நினைக்கின்றேன். இந்த வருடம் மார்ச் தொடக்க நாட்களில் கண்டியில் பேரினவாதத்தின் வன்முறைத் தாக்குதல்களுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருந்தது இஸ்லாமிய சமூகம். இப்ராஹீம் என்பவர் மலையக முஸ்லீம்களைப் பிரதிபலிப்பவராகவும், ஆதங்காக்கா கிழக்கு முஸ்லிம்களின் அனுபவ முகமாகவும் கதையில் கொண்டுவரப்பட்டுள்ளார். கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் தமக்கான பிரதேச அலகுகளை அமைத்து அதிகாரம் மிக்கவர்களாக வாழ்ந்து வருகின்றனர். அதனால் அங்குள்ள இளைஞர்களில் அநேகர் ஆக்ரோச மனோபாவம் கொண்டவர்கள். இது தம்மை எதிர் இனத்தவன் தாக்கும்போது எதிர்த்துத் தாக்க வேண்டும் என்ற அனைவருக்குமான இயல்பால் வந்தது. தனியியல்பு என்று மதிப்பிட முடியாது. ஒவ்வொரு இனத்தின் பொது இயல்பு அது. கண்டி நகரம் அப்படிப்பட்டதல்ல. அங்கு சிங்களவர்கள்தான் பெரும்பான்மையானவர்க…

இளையராஜாவின் இசை.

இளையராஜாவின் இசையின் அழகுணர்வையும், அவரின் இசை பற்றிய நுட்பங்களையும், வகைப்பாடுகளையும் அறிந்து கொள்வதற்கு பிரேம் ரமேஷ் எழுதிய "இளையராஜா: இசையின் தத்துவமும் அழகியலும்" என்ற நூல் பெரிதும் உதவக்கூடிய ஒன்று. மொழிக்கும், மதத்துக்கும் மூலமாக இருப்பது இசை என்று கூறும் அதே நேரம், 'ஒரு இசை இன்பத்துய்ப்பின் ஒரு வடிவமாக மாறுகிறதோ அப்பொழுதே அது இறைமை நீக்கம் செய்யப்பட்டுப் புலன்தன்மை பெறுகிறது' என்ற அடிப்படையில் பழைய வரலாறுகளைக்கொண்டு ஆராய்கிறது இந்நூல். இளையராஜாவின் இசை பற்றி முதன் முதலில் சரியான முறையில் ஆராய்ந்து ஆழமான கட்டுரைகள் எழுதியவர்கள் இவர்கள்தான். இதன் பின்னர் பலர் முயன்றார்கள். அ.மார்க்ஸ் என்ற கல்வியியலாளர் ஒருவர் இளையராஜாவின் இசை இந்து சனாதனத்தை ஆதரிக்கிறது என்று கூறிய ஒரு கட்டுரை வெளியிட்டார். ரமேஷ் பிரேம் ஆகிய இருவரும் இதற்கு எதிர்வினை வழங்கி அவரை நிராகரித்தது வேறுகதை. மேலும் அ.மார்க்ஸின் இசை பற்றிய உரையாடல்கள் பொருட்படுத்தப்பட வேண்டிய ஒன்றல்ல. அவசரத்தில் தலித்தியம் பேசி மூக்குடைபடும் முதல் கல்வியியலாளர் இவர்தான். ரமேஷ் பிரேமின் இந்நூலில் சிந்திக்கப்பட்ட அளவுக்கு…

இலங்கையின் முஸ்லிம் அதிகாரமும் சந்தர்ப்பவாத அணுகுமுறைகளும்.

இலங்கையில் தமிழ் இலக்கியம் பேசுபவர்கள் அரசியலால் ஆட்பட்டவர்கள் என்று எடுத்தால், விடுதலைப் புலிகள் பற்றிய ஆதரவு-எதிர் கருத்தில் இருந்துதான் தமது கருத்துக்களை முன்வைப்பார்கள். இதைப்பற்றிப் பேசாத ஒரு தொகுதியினரும் உண்டு. ஆனால் நடுவுநிலமை பேசுபவர்கள் என்னைப் பொறுத்த வரை சந்தர்ப்பவாதிகள் என்றுதான் கூறவேண்டும். சமீபத்தைய உதாரணம்; இலங்கையிலுள்ள இஸ்லாமிய அறிவு ஜீவிகள் கூறுகிறார்கள் மனோ கணேசன் பதவி விலக வேண்டுமாம். ஐ.நா சபையில் முழு முஸ்லிம் தலைமைகளும் தமிழருக்கு எதிராகத் திரண்டபோது, இலங்கையில் யுத்தக் குற்றமே நடக்கவில்லை என்று கூறியபோதெல்லாம் எங்கே போனது இந்த முஸ்லிம் அறிவு ஜீவிகளின் நேர்மை. இலங்கையிலுள்ள தமிழ் பேசும் இஸ்லாமிய சமூகம் விடுதலைப் புலிகளுக்கு எதிரானது. ஈழத்துக்கு எதிரானது. தனிநாட்டுக் கோரிக்கைக்கு எதிரானது. அதே நேரம் முள்ளிவாய்க்கால் பேரழிவை எள்ளி நகையாடக்கூடிய மனநிலையில்தான் நேற்றுவரை இருந்தது. இருக்கிறது. அதற்குப் பின்புலமாகச் சில காரணங்கள் இருக்கவே செய்கின்றன. அது அவர்களது நிலைப்பாடு. ஆனால் திடீரென்று இலங்கை தேசியப்பற்றுக்கு உள்ளான தமிழர்கள், தமிழ் பேசும் இஸ்லாமியர்களின் கர…

பௌத்தமும் நானும்

புத்தரின் படத்தைக் கவரிலும், வீட்டுச் சுவரிலும் மாட்டியதற்காகச் சில அறிவுஜீவிகள் எப்போது பௌத்த மதம் மாறினீர்கள் என்று அடிக்கடி கேட்கிறார்கள். இதற்கு நீண்ட பதிலாக மனதில் தோன்றியதை இங்கு பதிவுசெய்கிறேன். இது எனது சுயவிளக்கம்.
00
முதலில் பௌத்தம் என்பதனை நான் மதமாகக் கருதவில்லை. பரவலாக்கப்பட்ட தத்துவங்களின் தொகுப்பாகவே அதனை இன்றுவரையும் கருதிக்கொள்கிறேன். இருபதாம் நூற்றாண்டுகளில் மேற்கிலிருந்து நமக்கு அறிமுகமான தத்துவங்களை விடவும் இங்கிருந்த பௌத்தம் அகவயமான மானுட மன மோட்சத்துக்கான தீர்வு என்று அதனுள் செல்லும் போது உணரமுடியும்.
வேதாந்த மரபுகளுடன் விவாதம் செய்தே பௌத்தம் தன்னைத் தத்துவமாக உயர்த்திக் கொண்டுள்ளது. அத்துடன் தற்காலத்தில் தியானம், மாந்திரீகம் என்று மனதையும் உடலையும் வலியுறுத்திச் செய்யப்படும் இந்துக் காலாசாரம் சார்ந்த நிகழ்வுகளின் அநேக பாகங்களைத் தனக்குள் வைத்திருந்தது பௌத்தம்தான். இதனை இந்து பிராமணிய மேலாதிக்கர்கள் தமக்குரியதாக மட்டும் வைத்துக் கொண்டுள்ளனர். இதனால்தான் இந்திய தத்துவ மரபில் பௌத்தம் பற்றிய ஆராய்ச்சிகளும் உண்மைகளும் மறைக்கப்பட்டன. இந்து மதம்தான் தாய்மதம் என்ற கருத…

தமிழ் மாருதம்: சில எதிர்வினைகள்.

வாய்ப் பேச்சுக்களை விட எழுத்தால் ஏற்படும் விளைவுகளை அதிகம் நம்புகிறவன் நான். கடந்து செல்லும் விடயங்களை நமக்குள் பிரயத்தனமிக்க உணர்வுகளாக மாற்றுவதற்கு, எழுதுவதன் மூலம் மட்டுமே அடைய முடியும் என்பது எனது அடிப்படையும் ஆழமுமான கருத்து. இங்கு அடிப்படை என்பதிலுள்ள எனது வாதம் அடிப்படைவாதமல்ல. நூல்களின் ஆழத்திலிருந்து நான் பெற்றுக்கொண்ட உந்துணர்வுகள். தமிழ் மன்றம் நடாத்திய தமிழ் மாருதம் என்ற பண்பாட்டு நிகழ்வு பற்றிய எனது எதிர்வினைக்கு சம்பந்தப்பட்ட உறுப்பினர்களால் நேரடியாக எதிர்வினையாற்றபட்டது. அதிலுள்ள ஜனநாயகத் தன்மையை மிகவும் மதிக்கிறேன். அவர்களுடைய அந்த நிலைப்பாட்டை எண்ணி மனநிறைவடைகிறேன். எதிர்ப்பினை வெளியிடுபவன் தன்னளவில் தன்னை எதிர்ப்பவர்களைக் கூர்ந்து கவனித்தாகவேண்டும். அத்தருணத்தில் அவர்களுக்கு பேசுவதற்கான அவகாசத்தை வழங்கவேண்டும். அவர்கள் தங்களது முற்றுமுழுதான விமர்சனத்தை என்மீது வைத்தனர். நான் செவி சாய்த்தேன். அதற்கான பதிலை எழுத்தில் வழங்குகிறேன். ஏனென்றால் எனது பணி பேச்சல்ல. எழுத்து மட்டும்தான். தமிழ் மாருதம் என்பது பண்பாட்டு நிகழ்வு சார்ந்தது தானே பிறகெதற்கு அதனை நவீன இலக்கியத்துடன…

இஸ்லாமியர்கள் மீதான வன்முறையும் பொருளாதார மேலாதிக்கமும்.

இலங்கையில் சிறுபான்மையினர் மீதான வன்முறைக்கு நீண்ட வரலாறு உண்டு. சுதந்திரத்துக்கு முந்தைய சிங்கள-முஸ்லிம் கலவரமாகட்டும், சுதந்திரத்தின் பின்னரான தமிழ்-சிங்கள வன்முறைகளாகட்டும் அனைத்திலும் பெரும்பான்மையினரின் வகிபாகம் அதிகமானது. இதில் இரண்டாவது மூன்றாவது சிறுபான்மையினர் தமக்குள் தம்மைப் பகைத்துக்கொண்ட துன்பியல் வரலாறுகளும் உண்டு.
இந்த ஒட்டுமொத்தமான வரலாற்றின் வழி சமகாலப் பிரச்சனைகளை முழுவதுமாக அணுகமுடியாது. வரலாற்றைக் கடந்த ஐக்கியப் பார்வையின் தேவை சமகாலத்தின் இனத்துவ வன்முறைகளைக் கொண்டு நோக்கும் போது புலனாகிறது. அண்மைய காலங்களில் இலங்கையிலுள்ள இஸ்லாமிய மக்கள் மீது இன-மத ரீதியான தாக்குதல்கள் நாடுமுழுவதிலும் அதிகரித்துள்ளதை அவதானிக்கலாம். அவை பரந்த ஒரு பூதாகரமான இன அழிப்பு நடவடிக்கையாக மாறிவிடுமோ என்ற ஐயத்தைத் தொடர்ந்த சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றது. இதற்குப் பிரதான காரணமாக இனவெறி, மதவெறி போன்றவை அட்டவணைப்படுத்தப்பட்டாலும் அவற்றின் பின்னால் இருக்கும் பொருளாதார மேலாண்மை மீதான காழ்ப்புணர்வை யாரும் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை. வெறுமனே இன மத வெறி என்று மொத்தமாகச் சாயம் பூசி பெரும்பான…

இலக்கிய மன்றங்களும் நெருடல்களும்.

மேடைப் பேச்சுக்கும் எழுத்துக்கும் வடதுருவம் தென்துருவம் என்ற இடைவெளி இருக்கிறது. இங்கு நான் துருவங்களை அடையாளப்படுத்தக் காரணம் ஒரு அபிப்பிராயம் மீதான மிகைக் கலப்பற்ற கருத்துக்களை முன்வைக்கும்போது பௌதிக உதாரணங்களை அவற்றுக்குத் துணைக்கழைத்தால், அடுத்து வரும் கடினமான விடயப் பரப்புக்களை இலகுவாகவே கவனக்குவிப்புச் செய்யலாம் என்பதற்கே. மேடைப்பேச்சு எப்போதும் மனதைப் பதனப்படுத்தாத ஒரு பரபரப்பான தான் தோன்றித்தனமான சொற்களைக் கொண்டு அத்தருணத்துக்கென்று தயார்செய்யப்பட்ட அவசர வெளிப்படுத்துகை என்று கருதலாம். நீங்கள் நன்றாக உங்கள் ஒவ்வொருவரது அனுபவப்படி பார்த்தால் இதன் அர்த்தம் புரியும். உங்களது முதலாவது மேடைப்பேச்சின் அனுபவம் அல்லது அதற்கான தயார்படுத்துகை எவ்வளவு மனச்சிக்கல்பாடுகளை உண்டாக்கியிருந்தது என்று.
அங்கு அறிவின் தொழிற்பாடு எப்போதும் ஒரு பதற்றத்துக்கான முஸ்தீபுகளை நிகழ்த்திக்கொண்டிருக்கும். மனம் தன்னாலியன்ற ஒப்புமைகளையும் உணர்ச்சிவயப்பட்ட கருத்துக்களையும் அள்ளி வீசும். அவை சிறிய வயதிலிருந்து வலிந்து நம் ஆழ்மன வெளிப்பாடுகளில் இருத்தி வைக்கப்பட்ட ஒரு செயற்பாடு. நமது அரசியல் வாதிகளிடம் இதனைக்…

மௌனியின் படைப்புலகம் பற்றிய தகர்ப்பும் முன்னுதாரணமும்: சிறுகுறிப்பு.

மௌனியின் படைப்புலகம் பற்றிய மதிப்பீடுகளைப் பலர் முன்வைத்துள்ளனர். பலர் மிகையாகவும் ஒருசிலர் நியாயமாகவும். இதில் புதுமைப்பித்தன், பிரமிள், சு.வேணுகோபால் வெங்கட் சாமிநாதன், திலீப்குமார், ஜெயமோகன், ரமேஷ் பிரேம், முதலியவர்களின் மதிப்பீடுகள் முக்கியமானவை. முதல் மூவரும் மௌனியின் படைப்புலகினைப் பாராட்டியதுடன் சில அடைமொழிகளாலும் அவருக்கு முக்கியத்துவம் காட்டினர். மௌனி பற்றிய பின்வந்த நால்வரது கருத்துக்கள் மிக முக்கியமானவை. ஒரு நியாயப்பாட்டிலிருந்து கூறியவை. மௌனி நிராகரிக்க முடியாத எழுத்தாளர் ஆனால் திருமூலர் போன்ற அடைமொழிகள் மிகையானவை என்பது பின்வந்தவர்களின் கருத்து. இதற்கான ஆதாரங்களை அவர்கள் மௌனியின் 24 கதைகளிலிருந்தும் எடுத்துக்காட்டியுள்ளனர். மௌனியின் மொத்தப் படைப்புலகமும் இந்த இருபத்துநான்கு கதைகளுக்குள்தான் அடங்குகிறது. அதில் பிரபஞ்சகானம், அழியாச்சுடர், மாறுதல் போன்றவை முக்கியமானவை. இவற்றின் முக்கியத்துவத்துக்குக் காரணம் மௌனி தனது படைப்பூக்கத்தை கவிதையிலிருந்து கதைக்குத் தாவி எழுதியதுதான். இம்மூன்று கதைகளையும் வாசிப்பவர்கள் அதனை நன்றாகவே உணரமுடியும்.
மனதின் அக எழுச்சிகளைக் கூறிய மௌனி அவற…

சாய்வு: அத்துமீறலின் புலப்பதிவு, செயற்கையாக்கத்தின் குழந்தைத்தனம்"

இதற்கு முந்தைய அனோஜனின் கதைகள் பற்றிய பதிவுகளில் அவர் கதையின் பலங்களை மட்டுமே பதிந்திருக்கிறேன். சாய்வு என்ற கதையில் அவரது பலம்-பலகீனம் இரண்டையுமே அவதானிக்கலாம்."சாய்வு: அத்துமீறலின் புலப்பதிவு, செயற்கையாக்கத்தின் குழந்தைத்தனம்" என்று கதை மீதான  ஒட்டுமொத்தமான என் பார்வைத் தலைப்பை இட்டிருக்கிறேன். இதில் முதலாவது, கதை மீதான சாதகத் தன்மைகளையும், இரண்டாவது கதையின் பலகீனங்களையும் ஆராய்கிறது. 1. அத்துமீறலின் புலப்பதிவு.அத்துமீறலுக்கான வியாக்கியானங்கள் எல்லா மட்டத்திலும் இருந்தெழுபவை. அதற்கு விஞ்ஞானம், பண்பாடு, இனம், சமூகம், மொழி, சமாதானம் என்று எந்தப் பிரிவினையும் கிடையாது. அந்த அத்துமீறல்கள் ஆரம்பத்தில் ஒரு வியப்பையும் போகப்போகப் பழக்கப்பட்ட ஆழ்மன பிம்பத்தையும் நம்மிடையே அளிக்கின்றது. இதன் புரிதல்களுக்கான பக்குவம் உருவாக நம் சமூகத்தின் கடப்பாடுகள் வழிசெய்யாது. அந்தப் புரிதலை அடைய இரண்டு வழிகள் உண்டு.
1. அனுபவம். 2. இலக்கியம்.
அனுபவத்தை நம் சமூகத்தின் அடைவுகளைத் தாண்டி புதிதான சூழலில் சேரும்போது அதன் உத்வேகமான "மன நிகேதனம்" நமது சுய சிந்தனைகள் மீது கேள்விகளைத் தொடுக்கக்…