Skip to main content

Posts

Showing posts from April, 2018

இந்துக்களைப் பிரித்தாள்தல்.

என்னிடம் பேசும்போது ஒருவர் கூறினார். (அவர் திராவிடப் புத்தகங்களை மட்டுமே படித்தவர்) நீங்கள் எதற்காக இங்கே இந்து மதத்தையும் அதன் காவலர்கள் என்று சொல்லும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பையும் ஆதரிப்பது போலப் பதிவுகளை எழுதுகிறீர்கள். அந்த அமைப்பு பிராமணர்களுக்கு மட்டுமே சார்பான ஜாதிக் கட்சி அல்லவா? என்றார். அத்துடன் இங்குள்ள கோயில்களில் பிராமணர் தவிர்ந்த யாருமே கோயில் பூசாரி ஆகமுடியாது என்ற தற்குறிக் கருத்தையும் முன்வைத்தார்.  கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கு முன்பு இதுபோன்ற மூடத்தனத்தில்தான் நானும் இருந்தேன். பிறகு இங்குள்ள கோயில்களில் பூஜை மேற்கொள்பவர்களிடம் பேசிய பிறகுதான் அவர்கள் யாரும் பிராமணர் அல்ல என்ற தெளிவு கிடைத்தது. அதன்பிறகு திராவிட நூல்கள் மட்டுமன்றி பொதுவான நூல்களையும் கற்று ஒரு முடிவுக்கு வந்தேன். அந்த முடிவு  திராவிடம் என்பது போலியான நம்பிக்கை. இந்தியர்களைப் பிரிக்க வெள்ளையர்கள் உண்டாக்கிய அபத்தச் சொல். அந்த அபத்தங்களை உண்மையென்று நம்பிய பலரை இங்கு எனக்குத் தெரியும். இன்றும் நம்புகின்றனர். இப்படி ஏராளம் மாயைகளை இங்குள்ள பலருக்குத் தமிழ்நாட்டின் வழிவந்த திராவிட மூடர்களால் மூடக் கருத்துக்…

ஆர்.எஸ்.எஸ்: அடிப்படைப் புரிதல்கள்.

கேஷவ பலிராம் ஹெட்கேவர் தனது நண்பர்களுடன் 1925 ஆம் ஆண்டு இந்த அமைப்பை (Rashtriya Swayamsevak Sangh- RSS) ஆரம்பித்தபோது மிகக் கணிசமான அளவு மக்களின் ஆதரவே இவர்களுக்குக் கிடைத்தது.  பெருமளவு மக்களுக்கு ஆர்.எஸ்.எஸ் பற்றிய பிரக்ஞையே இல்லாமல் இருந்தது. பின்னர் முஸ்லிம் அடிப்படைவாதம் தலைதூக்கத் தொடங்கியதும் இந்தியாவின் அநேக பாகங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தேவை உணரப்படலாயிற்று. அத்துடன் வட இந்தியாவில் சாதிய வேற்றுமையை இல்லாது ஒழிப்பதற்கு இந்த அமைப்பு மேற்கொண்ட செயற்பாடுகள் மிகக் குறிப்பிடத்தக்க முயற்சிகளாகும். இதனால் இரண்டு தசாப்தங்களுக்கு உள்ளாகவே வட இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் பெரும் செல்வாக்குடன் வளர்ந்தது.  இதனை மகாத்மா காந்திகூட தனது ஹரியான் என்ற பத்திரிகையில் பாராட்டி எழுதியிருப்பார். பிற்காலத்தில் நடந்த காந்தி கொலை துன்பியல் சம்பவமாகிப்போனது. ஆர்.எஸ்.எஸ் தடைசெய்யப்பட்டு மீளவும் சமூக எழுச்சிக்காகக் கட்டமைக்கப்பட்டது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் தீண்டாமையை நேரடியாகவே நீக்குவதற்கான முயற்சிகளில் இறங்கினார்கள். இதன் பலனை ஆர்.எஸ்.எஸ் இன்று அந்த இடங்களில் அனுபவிக்கிறது. அங்குள்ள இடதுசாரிக…

யூமா வாசுகியின் மஞ்சள் வெயில்.

பாடசாலைக் காலங்களில் பெண்களுடன் பேசுவதற்கு மிகக் கூச்சப்பட்ட ஒருவனாகவே நீண்டகாலமாக இருந்து வந்தேன்.  பின்னர் பல்கலைக்கழகம் சென்ற காலப்பகுதியில் பெண்களுடன் பேசுவதற்கும் பழகுவதற்குமான வெளி உருவானது. இதற்கான காரணம் எனது மாவட்டத்திலிருந்து நான் பல்கலைக்கழகம் சென்ற இடம் கிட்டத்தட்ட நூற்றி நாற்பது கிலோ மீட்டர் தூரம் கொண்டது. அச்ச உணர்வுகள் அற்றுப் பெண்களுடன் பழகும் இயல்பான குணம் மேலோங்கிக்கொண்டது. ஆனால் அவ்வாறு பேசும் பெண்களுடன் எந்த அந்நியோன்யமான உரையாடல்களையும் நான் மேற்கொண்டதில்லை. குறிப்பாக ஒரு சிங்களப் பெண் மிக நேசமான மொழியால் ஓரிரு வார்த்தைகள் என்னுடன் பேசிப் பழகுவார். அப்போது சிங்கள மொழிப் பரிட்சயம் எனக்கு இல்லை என்பதால் தெரிந்த ஆங்கிலத்தில் பேசிச் சமாளிப்பேன். சில காரணங்களுக்காகப் பல்கலைக் கழகப் படிப்பை இடையில் நிறுத்திவிட்டு அங்கிருந்து வெளியேறினேன். வெளியேறிய பின்னர் சிங்களப் பெண் பல தடவைகள் தொடர்புகொண்டு பல்கலைக் கழகத்தில் இணையுமாறு வற்புறுத்துவார்.


மிகக் குழப்பமான மனநிலையுடன் நான் அங்கிருந்து வெளியேறி மிகத் தெளிவாகவே இலக்கிய வாசிப்பைத் தேர்ந்தெடுத்தேன். நீண்டகாலம் தொடர்ந்து வாச…

ஆறுமுகநாவலர் சாதிவெறியரா: சில புரிதல்கள்.

முகநூல் மற்றும் இணையப் பிரச்சாரங்களில் சில முஸ்லிம் அறிவுஜீவிகள் மற்றும் சில இடதுசாரிகள் முன்வைத்த கோமாளித்தனமான கருத்துக்கள் இவை.
1. ஆறுமுகநாவலர் ஒரு இந்துச் சாதி வெறியர்.
2. இந்தியாவிலுள்ள தமிழர்கள் போல இலங்கைத் தமிழர்களும் இந்துக் கொள்கைகளை விட்டு திராவிடர்களாக அணிசேரவேண்டும்.

இந்த இரண்டு கருத்துக்களையும் உற்று நோக்கினால் தெரிவது அப்பட்டமான "பிரித்தாளும் தந்திரம்." ஆறுமுகநாவலர் வர்ணாச்சிரமத்தை ஆதரித்தார் என்பதைத் தாண்டி அழியும் நிலையில் இருந்த ஏராளமான தமிழ் நூல்களைப் பதிப்பித்தார். வண்ணார் பண்ணையில் முதல் சைவ ஆங்கிலப் பாடசாலையை நிறுவினார். ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடினார். யாழ்ப்பாணத்து புலமைத்துவ மரபில் பெருமளவு மாறுதலை ஏற்படுத்தினார். இங்கு உள்ள முக்கியமான விடயம் யாழ்ப்பாண மையவாதம். இதனைக் கொண்டு ஏனைய இந்துத் தமிழர்களைப் பிரித்தாள்வதற்கான தந்திரம். உதாரணமாகத் தமிழகத்தின் தர்மபுரி போன்ற மாவட்டங்களில் ஆரம்ப காலத்தில் வன்னியர் என்ற இனக்குழுமத்தினர் நாயிடுக்களுக்கும் நாயக்கர்களுக்கும் அடிமைகளாக இருந்ததாக வரலாறு கூறுகிறது. அல்லது நிலமற்றவர்களாக வன்னியர் இருந்தனர். இதன் ப…

போகன் சங்கரின் கண்ணாடி போட்ட பூனைக்குட்டிகள். 01.

கவிதைகள் படித்து நீண்ட நாட்களாகிவிட்டது. கவிதைகள் எழுதிப் பல மாதங்கள் ஆகிவிட்டது. கவிதை எழுதுவதே தீண்டாமை போலப்  பார்க்கப்படுகிறது என்பதால் கவிதை எழுதுவது பற்றி எனக்குள் இருந்த இயலுமை கொஞ்சம் கொஞ்சமாக நீர்த்துப் போய்விட்டது என்றே சொல்லுவேன். ஒரு காலத்தில் கவிதை எழுதிக்கொண்டிருந்த நான்கூடத் தீண்டாமையில் இருந்து மீண்டு வந்துவிட்டேன் என்று புழகாங்கிதமடைந்ததுண்டு. ஆனால் உண்மையில் தீண்டாமையை முற்றாக ஒழிக்க முடிவதில்லைத்தானே. வெறும் வார்த்தைகள்தானே. அதுபோலத்தான் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் மோசமான கவிதை எழுதும் கவிஞனையும் முற்றாக நீக்க முடிவதில்லை. நான் மோசமான கவிஞன் என்று எனக்கு ஒரு விமர்சனம் போட்டுப் பார்த்துவிட்டு நிரந்தரமாக விமர்சனத் துறையைத் தெரிவு செய்தேன். அதன் பிறகு கவிதைகள் வாசிப்பதைக் குறைத்துவிட்டுப் புனைகதைகள் மீதும் அல்புனைவுகள் மீதும் கவனஞ்செலுத்தினேன். ஆனால் முற்றிலுமாகக் கவிதைகள் வாசிப்பதை நிறுத்தவில்லை. ஜெ.பிரான்சிஸ் கிருபா, தேவதச்சன், ரமேஷ் பிரேம், சுகுமாரன், நகுலன், பிரமிள், எம்.யுவன் மற்றும் கே.சச்சிதானந்தன் முதலானோரின் கவிதைகளை இடையறாது வாசித்து வந்துள்ளேன். இந்த…

இலங்கையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை வலுப்படுத்துதல்.

பொதுவாக நாம் திட்டமிட்ட சிங்கள-பௌத்த குடியேற்றங்களைப் பற்றிப் பேசுகிறோம். ஆனால் பேரினவாத நிழலில் நின்றுகொண்டு அத்துமீறிய முஸ்லிம் குடியேற்றங்கள் தொடர்ந்து தமிழ்ப் பகுதிகளில் நடைபெறுகிறது. இது பற்றி யாரும் பேசுவதில்லையே. ஏன்?. யாராவது ஒரே மொழி பேசும் ஒரே இனத்தவர்கள் நாம் என்று கூறினால் அதைச் சரியான முட்டாள்த்தனம் என்றுதான் கூறுவேன். அதனை எந்த ஒரு முஸ்லிமும் தமிழரும் ஏற்கப்போவதில்லை. இலங்கையில் இருப்பது மூன்று பிரதான இனங்களாகும். அதில் முஸ்லிம் இனமும் ஒன்று. தமிழக முஸ்லிம்களின் அதிகார நிலைப்பாடுகளுடன் வைத்து இலங்கை முஸ்லிம் அதிகாரத் தளத்தைப் பார்ப்பவர்களே அதிகம். இலங்கையின் அதிக விழுக்காடு முஸ்லிம் அதிகார மையம் அடிப்படைவாத மதப் பரப்புகையை நோக்காகக் கொண்டது. நலிந்த இனத்தை நசுக்குவதைக் கடப்பாடாகக் கொண்டது.


இலங்கையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் துணை அமைப்பான "சேவா பாரதி" என்று யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்குச் சேவை செய்யும் அமைப்பு ஒன்று வடகிழக்கில் இயங்கிவருகிறது. இதற்கு அரச அனுசரணை பெருமளவில் உள்ளது. இதன் பிரதான பணி மதமாற்றங்களைத் தடுத்து யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் …

அயோத்திதாசப் பண்டிதர்.

நவீனத் தமிழின் முதல் தத்துவச் சிந்தனையாளர் அயோத்திதாச பண்டிதர். ஒடுக்கப்பட்ட தலித்திய மக்களுக்காகத் தனது சிந்தனைகளை வடிவமைத்தவர். அயோத்திதாசரின் ஆய்வுக்கட்டுரைகள் தமிழின் நவீன உரைநடைக்குப் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளது. ஒவ்வொரு ஆய்வையும் தமிழின் மரபார்ந்த இலக்கியங்களில் இருந்தும் வரலாற்று நோக்கிலும் ஆழ்ந்து முன்வைத்த இவருடைய கருத்துக்கள் மிக மிக முக்கியமானவை. தலித்துக்கள் தங்களது பிறப்பாலும் மரபாலும் குணத்தாலும் இழிந்தவர்களல்ல. அவர்கள் மண்ணின் மைந்தர்கள்.  பூர்வ பௌத்தர்கள். பௌத்த மதத்தின் வீழ்ச்ஙிக்குப் பிறகு அவர்களுடைய நிலம் பிடுங்கப்பட்டு ஒடுக்கப்பட்டு வீழ்ச்சியடைந்தார்கள். இதைத்தான் அயோத்திதாசர் தனது ஆய்வுகளில் ஆதாரங்களுடன் முன்வைத்து எழுதியுள்ளார். ஈவேரா பிற்காலத்தில் விளாசித்தள்ளியவை அயோத்தி தாசரிடம் பெற்றவையாகும். ஈவேரா வெள்ளையர்களிடம் மண்டியிட்டார். ஆனால் அயோத்திதாசர் தனது மக்களுக்காகக் கடைசிவரையும் உழைத்தார். தலித் மக்கள் தங்கள் நிலையில் இருந்து மேலெழ வேண்டுமானால் அயோத்திதாசரின் சிந்தனைகளைத்தான் ஆராய்ந்து பின்பற்ற வேண்டும். மாற்றாக ஈவேரா போன்ற நிலவுடைமையிலிருந்து கிளர்ந்த…

ஜெயமோகன்.

'ஜெயமோகனின் அவதூறுகள்' என்ற தலைப்பில் முப்பது கட்டுரைகளை உள்ளடக்கிய நூல் ஒன்றை இடதுசாரிக் கும்பல்கள் வெளியிடவுள்ளனர். அதற்கு ஒரு பாராட்டை இவர்களுக்குச் சொல்லியாக வேண்டும். ஆனால் வழக்கம் போல இந்நூலையும் ஜெயமோகன் கண்டுகொள்ள மாட்டார். ஏனென்றால் இதில் பாதிப்பேர் ஜெயமோகனை முழுமையாகப் படிக்காமல் விளாசி எடுக்கப் போகிறார்கள். இவற்றுக்கு எதிர்வினையாற்றி ஜெயமோகன் தனது காலத்தை வீணடிக்க மாட்டார். இவர்களில் பலபேரின் முந்தைய கட்டுரைகளை வாசிக்கும் போது இதனை உணர்ந்து கொள்ளலாம். நிச்சயமாக தமிழ் அறிவுச் சூழலில் ஜெமோவின் எழுத்துப் பாதிப்பு அதிகமாகத் தொடங்கியுள்ளது. அதனை இப்படியான நூல்களை வெளியிட்டு ஈடுகட்ட நினைக்கிறார்கள். நான் கருதுவது சரியாக இருந்தால் ஜெமோ மீது பின்வரும் முத்திரைகளை அந்தக் கட்டுரை நூல் குத்திக்கொண்டு வரும்.  1. இந்துத்துவ மதவாதி.
2. RSS பாசிஸ்ட்.
3. தலித் விரோதி.
4. சாதி வெறியர்.
5. தமிழீழம் மற்றும் புலி எதிர்ப்பாளர்.
6. தமிழின விரோதி.
7. இனவாத மலையாளி நாயர்.
8. இஸ்லாமிய எதிர்ப்பாளர்.
9. மார்க்சிய-கம்யூனிச-இடதுசாரி எதிர்ப்பாளர்.
10. மரபுவாதி.
11. பிற்போக்குவாதி.
12. இந்தியத்…

இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு: ராமச்சந்திர குஹா.

ராமச்சந்திர குஹா எழுதிய இந்திய வரலாற்றாய்வு நூல். அநேக இடதுசாரிகளால் இந்துத்துவச் சார்பு நூல் என்று பச்சையாகவும், பொய்யாகவும் பிரச்சாரம் செய்யப்பட்டு ஒதுக்கப்பட்டு வருகிறது. அடிப்படையில் இந்நூலை பிராந்தியத்தின் பூகோள அரசியல் அறிவைப் பெறுவதற்காகவும் காந்திக்குப் பிற்பட்ட இந்திய தேசத்தின் வரலாற்றை ஆய்வு நோக்கில் அறிந்து கொள்ளவும் வாசிக்கலாம். நூலாசிரியர் தனது நூன்முத்தில் எழுதியிருப்பார் இது உலக வரலாற்றில் ஆறில் ஒரு பகுதி வரலாற்றைக் கூறுகிறது என்று. இந்நூலைத் தர்க்க பூர்வமாகவும் வரலாற்று ஆய்வு நோக்கிலும் நிராகரிக்க முடியாதவர்கள் கூறும் வார்த்தை இது ஒரு இந்துத்துவ நூல் என்று. இந்தியா பிரிட்டிஷிடமிருந்து சுதந்திரம் பெற்றது என்பதை மிகப் பெரிய வரலாறாக நூற்றுக்கு மேற்பட்ட நூல்களில் எழுதியவர்கள் சுதந்திரத்துக்குப் பின்னரான இந்திய யூனியன் ஒன்றிணைவை நேர்மையான முறையில் யாரும் பதிவு செய்யவில்லை. இங்கு இந்திய யூனியன் என்று குறிப்பிட்டது அய்நூற்றுக்கும் மேற்பட்ட பழம்பெரும் இந்தியச் சமஸ்தானங்களையும் தேசியத்துக்குள் இணைத்ததையும் பற்றியாகும். இவற்றை சர்தார் வல்லபாய் பட்டேல் தலைமையிலான குழு எப்படி தே…

இலங்கையில் இந்து மதத்தை நிறுவனமயமாக்கல்: அடிப்படைகள்.

தமிழ்நாட்டிலுள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்(TNTJ) என்கிற இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பின் கிளைதான் இலங்கையிலுள்ள ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ) அமைப்பு.
தமிழ்நாட்டிலுள்ள மதமாற்றத் தென்னிந்தியக் கிறிஸ்த்வத் திருச்சபையின்  ஒரு கிளைதான் இலங்கையின் வடகிழக்கில் தற்போது தீவிரமாகச் செயற்படும் கத்தோலிக்கத் திருச்சபையினர். சரி, இதனை இங்கு குறிப்பிடக் காரணம் இந்த இரண்டு அமைப்புக்களின் பணி இங்கு எவ்வகையானது என்பதுதான். இலங்கையில் 2009 யுத்தம் முடிவடைந்த பின்பு வடகிழக்கில் இந்த இரண்டு அமைப்புக்களின் பிரச்சாரங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. குறிப்பாக தவ்ஹீத் ஜமாத்தினுடைய பணிகளுக்கு முஸ்லிம் அமைச்சர்களுடைய ரகசியச் செல்வாக்கும்  அதிகமாகவே உள்ளது. ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் மாற்றுச் சமூகங்கள் மீது வெறுப்புப் பேச்சுக்கள் மூலம் முஸ்லிம் இளைஞர்களை ஆவேசமான அடிப்படைவாதிகளாக மாற்றி வருகின்றது என்பது அனைவரும் அறிந்த உண்மை. அதே நேரம் இனவாதத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் இடங்களுக்குச் சென்று இவர்களே முதல் ஆய்வு செய்து இணையம் மூலம் தரவு திரட்டியும் வருகின்றனர். தவீஹ்த் ஜமாத்தின் முக்கியமான உத்தி தங்களைத் தனித்த …

RSS மற்றும் இலங்கைத் தமிழர்கள்.

"ஆர்.எஸ்.எஸ் நன்கு கட்டமைக்கப்பட்ட கட்டுக்கோப்பான ஓர் அமைப்பு. அதன் ஆற்றலை இந்தியாவின் நலன்களுக்கு ஆதரவாகவோ எதிராகவோ பயன்படுத்த முடியும். அதற்கு எதிராக மதவெறியைத் தூண்டுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறதா என்பது எனக்குத் தெரியாது. அக்குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று தங்கள் நடவடிக்கை மூலம் நிரூபிப்பது அவர்கள் பொறுப்பு.  கட்டுப்பாடும் சாதி வேறுபாடு பார்க்காத தன்மையும் ஆர்.எஸ்.எஸ் உடைய சிறப்பம்சங்களாகும்." -மஹாத்மா காந்தி. To Members Of the R.S.S
Harijan, 28-September-1947.
====
ஆர்.எஸ்.எஸ் என்ற இந்துத் தேசியவாத இயக்கம் பற்றி காந்தி தனது பத்திரிகை மூலம் 1947 இல் எழுதிய கட்டுரையில் இருந்த பகுதிகள் அவை. 1933-1947 வரை காந்தி வெளியிட்டு வந்த ஹரிஜான் என்ற பத்திரிகை மூலமாக இக் கருத்தை அவர் பகிர்ந்துள்ளார். 1948 இல் அதே இயக்கத்தின் கடும்போக்காளர் ஒருவரால் காந்தி படுகொலை செய்யப்பட்டார். காந்தியின் கொலைக்குப் பின்னர் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. அதே நேரம் தான் காந்தியைப் படுகொலை செய்யக் காரணம் இஸ்லாமிய-இந்து கலவரங்களில் காந்தி முஸ்லிம்களுக்குச் சா…

மரபழிப்பு.

அநேக இந்து மத எதிர்ப்பாளர்களாலும், இடதுசாரிகளாலும், இஸ்லாமிய, கிறிஸ்த்தவ மதப் பிரச்சாரகர்களாலும் "ஆசான்" என்று விழிக்கப்படும் 'நேர்மையில்லாத' எழுத்தாளர் எஸ்.வி ராஜதுரை வெளிநாட்டு மதப் பிரச்சாரகர்களும், இனக் கொலைக்கு ஆதரவானவர்களும் வழங்கும் நிதியை வைத்தே இந்து, இந்திய எதிர்ப்பைத் தனது எழுத்தில் பதிவு செய்து வந்துள்ளார் என்பது ஆறு வருடங்களுக்கு முன்பாகவே சிலர் உறுதிசெய்து எழுதியுள்ளனர். இது எனக்கு பெரும் மனக்கிலேசத்தை உண்டாக்கியது. இவரது கட்டுரைகளையும், அரசியல் நோக்குகளையும் ஒருகாலத்தில் பின்தொடர்ந்தவன் என்ற முறையில் அதற்கொரு பின்னோக்கம் இருந்திருக்கிறது என்றவுடன் சற்று அதிர்ச்சியாகவே இருந்தது. இத்தனைக்கும்மேல் இவர் ஒரு மார்க்சிய எழுத்தாளர் என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டிய அம்சம். இதனை ஆதாரங்களுடன் எழுதிய ஜெயமோகனுக்கு இருபது லட்சம் நிதிகோரி வசைகளுடன் வழக்குத் தொடர்ந்தவர் எஸ்.வி ராஜதுரை. ஒரு காலத்தில் இவரது கட்டுரைகளையும் இவரை மிகப்பெரும் ஆளுமையாகவும் கருதி வாசித்தவர்களுக்கு இவை பேரிடியாக அமையலாம். அவர் எழுதிய பாதி விடயங்கள் நிதியாதாரங்களுக்காகன உள்நோக்கில் எழுதப்பட்…

இலங்கையின் இலக்கிய வாசகர்கள்

கடாரத்தைச் சேர்ந்த எழுத்தாளர் ம.நவீன் எழுதிய பயணக்கட்டுரையைப் படிக்க முடிந்தது. இதனை முன்வைத்து ஜெயமோகன் எழுதிய சிறுகுறிப்பும் அவருடைய இணையத்தில் பதிவேற்றம் பெற்றிருந்தது. இலங்கையில் இலக்கிய வாசகர்கள் இருக்கிறார்களா என்று இந்த இருவரும் சந்தேகம் கொள்வதான பாணியில் கட்டுரையும் குறிப்பும் இடம்பெற்றுள்ளது. ஜெயமோகன் தனது குறிப்பில் அதனைச் சாரமாக்கியுள்ளார். இதனை இவர்கள் மிகத் தாமதமாகக் கண்டறிந்துள்ளனர் என்றே நினைக்கின்றேன். ஒரு மாதத்துக்கு முன்பாகவே இங்குள்ள ஒரு இலக்கிய- பண்பாட்டு மன்றத்தைப் பற்றி இதே தொனியில் மூன்று பதிவுகள் எனது புளக்கரில் எழுதியிருந்தேன். அதன் சாரம் இதுதான் "நவீன இலக்கியத்தை அண்மித்திராத அரைவேக்காடுகள்" என்று.  அப்போது அதற்கான எதிர்வினைகள் இரண்டு கிழமையாக வந்துகொண்டே இருந்தன. சிலர் தொலைபேசியில் அழைத்துக் கூறியிருந்தனர் இப்படி எழுதுவதைத் தவிர்த்திருக்கலாமே. அவர்களையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்று. நான் உறுதியாக மறுத்திருந்தேன்.  அப்போதுதான் உங்களையே தெரியும் என்ற தொனியில் பலர் நக்கல்படப் பேசியிருந்தனர். இதையே சற்றுத் தாமதமாக ஒட்டுமொத்த இலங்கைக்கும் சேர்த்…

ஈவேரா: மறுப்புகள்.

இனி ஈ.வே.ராமசாமியின் சிஷ்யர்களுடன் விவாதம் செய்வதாக இல்லை. அதற்கு முன்பாகவே தன்னிலை விளக்கம் கொடுத்துவிட்டு இந்த ரேகை தேய்விலிருந்து கொஞ்ச நாட்கள் விலகியிருக்க வேண்டியுள்ளது. தமிழறிவே இல்லாமல் தமிழைத் திட்டித் தீர்த்த ஈவேராவை அரசியல் சரிநிலையில் வைத்து இடதுசாரிகள் செய்யும் இந்து எதிர்ப்புக் கூத்துக்கள் நீண்ட நாட்கள் நீடிக்காது என்பது தெரியும். அதற்கு அவர்களது பதற்றங்களே ஆதாரமாயுள்ளன. தமிழை ஈவேரா திட்டவில்லை என்கிறார்கள். "பெரியார் களஞ்சியம்" என்ற பெயரில் ஈவேராவின் பேச்சுக்களும், குடியரசு, விடுதலை இதழில் அவரெழுதிய தலையங்கங்களும் சாட்சிகளாகவுள்ளன. இவற்றை ஒருவன் நேரமொதுக்கி வாசித்துப் பார்த்தால் தெரியும் அதற்குள் இருப்பது பச்சையான நிலவுடைமை வெறியும் கவர்ச்சிகரமான அய்ரோப்பியக் கலாசாரமும் என்று. இந்து ஞான மரபையும், தமிழ் மொழியின் இரண்டாயிரம் ஆண்டுகால இலக்கியப் பரப்பையும் அறியாத ஒருவர் ஈவேராவை மட்டும் வாசித்துவிட்டு இங்கு உரையாடல் செய்து அவருடைய அனைத்துக் கருத்துக்களையும் நியாயப்படுத்துவார் என்றால் அப்படியானவர்களுடன் உரையாடல் செய்து ஆகப்போவது ஒன்றுமில்லை. 1. தங்கத்தட்டிலே வைத்த…