Skip to main content

போகன் சங்கரின் கண்ணாடி போட்ட பூனைக்குட்டிகள். 01.


கவிதைகள் படித்து நீண்ட நாட்களாகிவிட்டது. கவிதைகள் எழுதிப் பல மாதங்கள் ஆகிவிட்டது. கவிதை எழுதுவதே தீண்டாமை போலப்  பார்க்கப்படுகிறது என்பதால் கவிதை எழுதுவது பற்றி எனக்குள் இருந்த இயலுமை கொஞ்சம் கொஞ்சமாக நீர்த்துப் போய்விட்டது என்றே சொல்லுவேன். ஒரு காலத்தில் கவிதை எழுதிக்கொண்டிருந்த நான்கூடத் தீண்டாமையில் இருந்து மீண்டு வந்துவிட்டேன் என்று புழகாங்கிதமடைந்ததுண்டு. ஆனால் உண்மையில் தீண்டாமையை முற்றாக ஒழிக்க முடிவதில்லைத்தானே. வெறும் வார்த்தைகள்தானே. அதுபோலத்தான் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் மோசமான கவிதை எழுதும் கவிஞனையும் முற்றாக நீக்க முடிவதில்லை. நான் மோசமான கவிஞன் என்று எனக்கு ஒரு விமர்சனம் போட்டுப் பார்த்துவிட்டு நிரந்தரமாக விமர்சனத் துறையைத் தெரிவு செய்தேன். அதன் பிறகு கவிதைகள் வாசிப்பதைக் குறைத்துவிட்டுப் புனைகதைகள் மீதும் அல்புனைவுகள் மீதும் கவனஞ்செலுத்தினேன். ஆனால் முற்றிலுமாகக் கவிதைகள் வாசிப்பதை நிறுத்தவில்லை. ஜெ.பிரான்சிஸ் கிருபா, தேவதச்சன், ரமேஷ் பிரேம், சுகுமாரன், நகுலன், பிரமிள், எம்.யுவன் மற்றும் கே.சச்சிதானந்தன் முதலானோரின் கவிதைகளை இடையறாது வாசித்து வந்துள்ளேன். இந்தக் கவிதை வாசிப்பைத் திடீரென்று நிறுத்தியதும் மனக்கிலேசமும் மொழியுடன் தொடர்ந்து பயணிக்க முடியாத அந்நியத்தன்மையும் எனக்குள் ஏற்பட்டது. அதனை நிவர்த்தி செய்ய ஏதேச்சையாக போகன் சங்கர் கவிதைகள் எனக்கு அறிமுகமானது. மேற்குறித்த கவிஞர்களின் கவிதைகள் எனக்குள் உண்டாக்கும் உத்வேகத்தையும் மொழியுடனான நெருக்கத்தையும் ஆன்மீகத் தேடலையும் போகனின் கவிதைகள் எனக்குத் தந்தன. எப்போதும் நமக்குள் கவிதையை வைத்திருக்கவேண்டும். இல்லாது போனால் மொழியுடனான எந்தப் பாகத்துக்குள்ளும் எம்மால் ஆழமாகவும் ஆத்மார்த்தமாகவும் நுழைய முடியாது.

போகனின் கவிதைகளுடன் நான் நெருங்கிப் பயணிக்கிறேன்.  கேரளத்து வாசத்தைக் கவிதைகளில் கொண்டு சேர்ப்பது ஸ்வந்தமான ஒரு பிரணயத்தை எனக்குள் அளிக்கிறது. இந்தத் தொகுப்பைப் பற்றிய இந்தப் பதிவை ஒரு விமர்சனமாக நான் சொல்ல மாட்டேன். இது ஒரு அனுபவப் பகிர்வு. வாசிப்பு அனுபவம்.



"தடித்த கண்ணாடி போட்ட பூனை" என்ற இத்தொகுப்பிலுள்ள அனைத்துக் கவிதைகளும் தலைப்பிடாது எழுதப்பட்டுள்ளது. போகன் சங்கர் எழுதிய முக்கியமான கவிதைகளை இதில் வாசிக்க முடியும்.

00

"பாதி கேட்கப்பட்ட பிரார்த்தனை" என்று தொகுப்பிலுள்ள ஒரு கவிதை அமானுஷ்யமான விடயக்கூறுகளால் ஆனதென்று கூறுவேன். பொதுவாக நமது சமூகத்தின் பௌராணிக நம்பிக்கைகளை இன்னொரு கோணத்தில் வைத்துப் பார்க்கும் எழுத்துக்களைக் கண்டடைவது கடினம். ஒன்று பழமைவாதம் ஜொலிக்கும் அல்லது அழகியல் ரசனை மதிப்பீட்டுக்குள் உள்ளடங்காத வகையில் அவை தாழிறங்குகின்றன. ஆனால் போகனின் கவிதைகள் எம்மை ரசனைக்கும் புதுமைக்கும் கொண்டு செல்கிறது. ஒரு கதையை மொழிக்குள் அடக்கி எடுத்துப் போட்ட கவிதை.

பாதி முடிக்கப்படாத வீட்டை  ஒருவர் வாங்க முனைகிறார். அந்த வீட்டைக் கட்டியவர் அயல்நாட்டில் இறந்து போகிறார். அவரது மனைவி கருவாக இருக்கிறார். இவர் அச்சத்தில் அவ்வீட்டை வாங்குவதைத் தவிர்க்கிறார். அந்த வீட்டில் சருகுகள் சிதறுவதை இரண்டு குழந்தைகள் ஓடி விளையாடுவது போன்ற அச்சத்தை அவருக்கு அளிக்கிறது. அந்த வீட்டின் பெயர் "இறை இந்த வீட்டைக் காக்கிறது" என்று அமைகிறது.  அமானுஷ்ய உணர்வை நமக்குள் மிக எளிமையாக வெளிப்படுத்தும் கவிதை இது. கவிதையில் வாழைமரம் என்பது ஒரு சந்ததிக்கான தொடர் குறியீடாகவே வருகிறது என்றும் கருதலாம்.

00

உடல் பற்றிய மதிப்பீடுகளை நாம் ஒவ்வொருவரும் எப்படி வைத்திருக்கின்றோம். உடலின் தேவைகளில் ஒன்றான புணர்தலை நாம் எப்படி அணுகுகிறோம். ஒரு பெண்ணைப் புணர்கையில் அருவருப்பான சம்பவங்களை நாம் நினைவு கூர்வோமா?  இறந்த பிறகு நாம் கல்லறையிலிருந்து மீண்டு வந்து அவளின் சட்டையுடன் புணர்வோமா?. போகன் சங்கரின் கவிதைகளில் உடல் பற்றிய  அநேகமான கருத்துக்கள் புணர்தலில் இருந்தெழுபவை. உடலைப் பற்றித் தெளிவான நிலைப்பாட்டை எடுக்கமுடியாத இளைஞனின் துர்ப்பாக்கியமான தெளிவின்மையால் உண்டானவை.

"உடல் என்பது 
எத்தனை நுணுக்கமான திருகுகளால் நிறுவப்பட்டது. 
எத்தனை எளிமையான விசைகளால் 
அழிந்து விடக்கூடியது என்று அறிந்தபின்பு
மறுக்கவும் துறக்கவும் தேர்ந்தெடுக்கவும் நான் யார்?"

00

"அழுகிய வாதாம் பருப்பு வாசனை....." என்று தொடங்கும் நெடுங்கவிதையில் பண்டைய சேரநாட்டின் சொற்களை ஆங்காங்கே உபயோகித்துக் கவிதை எழுதப்பட்டுள்ளது. உதாரணமாகக் குளிமுறி என்பது கேரள வழக்கில் குறிப்பது குளியல் அறையை. "கேரளத்தின் மழை எங்களைத் துரத்தித் துரத்தி நனைத்துக் கொண்டிருக்கிறது" இந்த மழையை நெடுங்கவிதையின் கதை முடியும் வரும் இடம் முழுமைக்கும் அழகுபடுத்திக்கொண்டே போகன் செல்கிறார். வழக்கமான கதையைக் கொண்டு எழுதப்பட்ட வழக்கத்தை மீறிய கவிதை என்பது இக்கவிதை மீதான அபிப்பிராயம். கிறிஸ்த்தவ ஆன்மீக உட்செலுத்தல்கள் மிக அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.

"எழுந்தபோது சுவரில் ஒரு இரக்கமான நோக்குடன் 
ஒரு லத்தீன் முகம் கொண்ட ஏசு அவர் உதடு 
திறந்து என்னிடம் எதையோ சொல்ல 
விரும்புவது போலிருந்தது."

ஒரு பெண்ணின் அறைக்குள் நுழையும் போது அங்கே ரமணர் சுவாமி, ராமா பரமஹம்ச யோகானந்தா முதலிய இந்திய ஆன்மிகவாதிகளின் புஸ்த்தகங்கள் சிதறிக்கிடக்கின்றன. ஆனால் இவரது எண்ணமும் வர்ணனையும் பூர்வ யேசு பற்றியதாக மாற்றமடைகிறது. இடையில்கூட குருபீடங்கள் மீது பலவீனம் இருப்பதாகக் கூறுகிறார். ஆனால் இறுதியில் அந்தப் பெண்ணின் நிர்வாணத்தைக் கண்டதும் ஏவாள் பற்றித் தனது ஆன்மீகத் தளத்தை மாற்றியமைக்கின்றார். ஒரு பெண்ணின் நிர்வாணம் எத்தகைய ஆன்மீகத் தளத்தையும் மிக இலகுவில் மாற்றிவிடக் கூடியது. அதனால்தான் ஏராளம் ஆன்மீகவாதிகள் பெண்களின் விடயத்தில் மிக இலகுவாக சர்ச்சைக்கு ஆளாகின்றனர். அதனை மிக அழகுணர்வுடன் நேரடித்தன்மை இல்லாமல் போகன் எழுதியுள்ளார். இதனை ஒவ்வொருவரும் தமக்குரிய அபிப்பிராய நோக்கில் வைத்துப் பார்க்கலாம்.

"பிரார்த்திக்கும் போது அவள் ஆடையெதுவும் 
அணிந்து கொள்ளவே இல்லை என்பதைக் கவனித்தேன்.
உண்மையில் அதுவே அந்தக் கணத்துக்குப் 
பொருத்தமான ஆடையாய் இருந்தது."

மேலும் இந்த நெடுங்கவிதையை ரசனை அடிப்படையில் அணுகுவதே விமர்சகனுக்கும் கவிஞனுக்கும் மிகப்பெரிய  பலமாக இருக்கும்.
இக்கவிதையின் தொடக்கத்தில்  போகன் இப்படி எழுதுகிறார்;
'அவள் கண்கள் கவிழ்த்து வைக்கப்பட்ட கோப்பைகள் போல மிதக்க'
அதே போலக் கவிதையின் முடிவான பகுதியில்,
'நான் அவளது கோப்பைகள் நிமிரத் தொடங்குவதை இப்போது கவனித்தேன்' என்று அமையும். ஒரு புனைகதையின் நுட்பம் இதில் மிக ஆழமாக வெளிப்படுகிறது. இக்கவிதைத்தொகுப்பை எழுதிய பிறகு போகன் சங்கர் "கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்" என்ற கதைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார். அவைகூட மிக ரசனைத்தன்மையாக எழுதப்பட்டுள்ளன.



00

ஒருவனின் மனதுள் ஆழ வேரூன்றிய மனவக்கிரங்கள் யாராலும் நிரந்தரமாக அழிக்கப்பட முடியாத ஒன்றாகும். அதனை நம் அன்றாட நிகழ்வுகளின் சின்னஞ்சிறு சம்பவங்கள் தெளிவுபடுத்துகின்றன.
இதைத்தான் பாரதியார்  "கோலமும் பொய்களோ? அங்குக் குணங்களும் பொய்களோ" என்று சொல்லியிருப்பார். இதிலுள்ள குணங்கள் குறிப்பது மனிதனின் மன வக்கிரத்தைத்தான். மிக சூட்சுமமான அடுத்துக் கெடுக்கும் துர்க்குணத்தையாகும். இவை ஆழ்மனதில் Unconscious ஆக வேரூன்றியுள்ளது. இதை போகன் சங்கர் இப்படி எழுதியுள்ளார்.
"பிறகு அந்த இடத்தில்
வேறு யாரோ வந்து அமர்ந்தார்கள்
அவர்கள் தோளில்
ஒரு குருவி வந்து அமர்ந்தது
பிறகு அவர்கள் புன்னகைத்தார்கள்
அவர்கள் புன்னகையில் வயல் 
காற்று போல ஒரு ஈரம் இருந்தது.
அவர்கள்  என்னை அழும் குழந்தையை 
அழைப்பது போல வா என்று 
பச்சை துளிர்க்கும் கைகளால் அழைத்தார்கள்.
நான் தவழ்ந்து தவழ்ந்து அவர்கள் அருகில் போனேன்.
போய் மடியில் ஏறிக்கொண்டு
முதல் வேலையாக அந்தக் குருவியின் 
கழுத்தை நெரித்தேன்"

எவ்வளவு பண்பட்டவராக இருந்தாலும் அவருள் இருக்கும் பண்பட்ட வக்கிரம் பற்றிய குறிப்பாக அந்தக் கவிதையை அணுகலாம்.  " வா என்று பச்சை துளிர்க்கும் கைகளால் அழைத்தார்கள்" என்பதன் நொய்மையைக் கொண்டு "அந்தக் குருவியின் கழுத்தை நெரித்தேன்" என்பதிலுள்ள வக்கிரம் மனிதத்தின் பெரும்பான்மை சாரம்தான்.

00

நகுலனின் கவிதைகள் கொண்டுவரும் பிரபஞ்சம் ஒரு சூன்யம் என்ற கருத்தை மனித வாழ்வுடன் தீவிரமாகப் பிணைப்பதாக போகனின் கவிதைகள் அமைகின்றன.
"எனக்கு யாருமில்லை நான்கூட"
"யாருமில்லாத பிரதேசத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது
எல்லாம்"
போன்ற நகுலனின் கவிதைகள் ஒரு வெறுமையைப் பிரஸ்த்தாபிப்பவை. ஆனால் போகனின் கவிதைகள் பிரபஞ்சத்தையும் மனித வாழ்வையும் ஒன்றுக்குள் ஒன்றுடன் ஆழப் பிணைக்க முயல்பவை.

"நான் யார்
உனக்கு நான் யாருமில்லை.
தொலை வானில் தேயும் புள்ளி.
கடைசியாய் அணைக்கப்படும் விளக்கு"

விலகல் தன்மைகளை ஆரம்பத்தில் வெளிப்படுத்தினாலும் "அணைக்கப்படும் விளக்கு" என்பதிலுள்ள நெருக்கம் பிரபச்சத்துக்கும் மனித வாழ்க்கைக்குமானது. லௌகீக வாழ்க்கையின் பற்றுதலை ஆழமாகக் கூறுவது போகனின் வழி.



00

நவீன கவிதையை எப்படி அடையாளம் காண்பது. எல்லாமே ஒன்று போலத்தானே இருக்கிறது என்று சொல்வார்கள். இதனை வரையறுப்பதற்கு எந்த வகையான யுக்தியைப் பாவிப்பது என்று சிக்கலான கேள்வியை மிக ஆழமான விளக்கமாகச் சொல்லுமாறு கேட்பார்கள். ஆரம்பத்தில் புரிந்து கொள்வதிலும் புரிய வைப்பதிலும் சிக்கல்பாடுகள் இருக்கும். ஆனால் அவற்றுக்கான தெளிவை வாசிப்பின் மூலம்தான் உறுதிப்படுத்ணிக்கொள்ளவும் புரிந்து  கொள்ளவும் முடியும். வெறுமனே ஒரு விளக்கம் மூலம் தெளிய வைக்க முடியாது. இதுவரை எமது பள்ளிப் பாடத்திட்டங்களில் வைக்கப்பட்டது புதுக்கவிதைகள்தான். இப்போதும் அதைத்தான் செய்கிறார்கள். அறக் கருத்துக்களை வெளிப்படையாகச் சொல்லும் மிக எளிய மொழியால் ஆனவையாக அவை இருக்கின்றன. அவற்றைச் சந்தம் கூட்டி மனப்பாடம் செய்வதற்கான வகையில் எழுதப்பட்டிருக்கும். ஆனால் நவீன கவிதைகள் கவிதை அமைப்பின் நுட்பங்கள் மீது எந்த நம்பிக்கையும் கொள்ளாமல் எழுதப்படுபவையாகத் தான் நான் கருதுகிறேன். போகன் சங்கரின் இந்தக் கவிதையை இதற்கு எடுத்துக்காட்டாக முன்வைக்கலாம்.

"வானவில்லின் மறுபுறம் மிதக்கும் 
நீலப் பறவைகள் போல நம் குழந்தைகள் இருக்கிறார்கள்.
ஆழக் குதிக்கும் ஆற்றில்
நாம் அவர்கள் தற்காலிகமாகத் 
தாவி நிற்கும் ஒரு பாறையெனவே நிற்கிறோம்.
நம்மிடமிருந்து உந்தி எழுந்து பறந்து 
உன்னைவிடவும் உன்னைவிடவும் 
அவர்கள் பிரபச்சத்தை இன்னும் 
கூர்மையாக அறிவார்கள்.
நீண்ட தூரம் பறப்பார்கள்.
பாறைகள் பறப்பதில்லை தான்
ஆனாலும் யார் கண்டது?
அவர்கள் நம்மையும் பறவையாக்கும் 
ஒரு சொல்லோடு என்றேனும் 
திரும்பி வருவார்கள்"

இந்தக் கவிதை மிகப்பெரிய நம்பிக்கை என்ற கருவை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. "பறவையாக்கும் ஒரு சொல்" என்ற வரிகளில் நவீனத்துவம் கிளைகொள்கின்றது. நவீனம்- பழையது பற்றிய மேலதிக புரிதல்களை தாம் பெறுவதற்கு ஒன்றில் முற்றாக நவீனத்தை அறிந்திருக்க வேண்டும். அல்லது பகுதியளவேனும் பழமையைக் கடந்திருக்கவேண்டும். இங்கு போகன் சங்கரின் கவிதைகள் வேர்கொள்ளும் இடம் இதில்தான்.
-
தொடரும்.....

00



Popular posts from this blog

ஆர்.எஸ்.எஸ்: அடிப்படைப் புரிதல்கள்.

கேஷவ பலிராம் ஹெட்கேவர் தனது நண்பர்களுடன் 1925 ஆம் ஆண்டு இந்த அமைப்பை (Rashtriya Swayamsevak Sangh- RSS) ஆரம்பித்தபோது மிகக் கணிசமான அளவு மக்களின் ஆதரவே இவர்களுக்குக் கிடைத்தது.  பெருமளவு மக்களுக்கு ஆர்.எஸ்.எஸ் பற்றிய பிரக்ஞையே இல்லாமல் இருந்தது. பின்னர் முஸ்லிம் அடிப்படைவாதம் தலைதூக்கத் தொடங்கியதும் இந்தியாவின் அநேக பாகங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தேவை உணரப்படலாயிற்று. அத்துடன் வட இந்தியாவில் சாதிய வேற்றுமையை இல்லாது ஒழிப்பதற்கு இந்த அமைப்பு மேற்கொண்ட செயற்பாடுகள் மிகக் குறிப்பிடத்தக்க முயற்சிகளாகும். இதனால் இரண்டு தசாப்தங்களுக்கு உள்ளாகவே வட இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் பெரும் செல்வாக்குடன் வளர்ந்தது.  இதனை மகாத்மா காந்திகூட தனது ஹரியான் என்ற பத்திரிகையில் பாராட்டி எழுதியிருப்பார். பிற்காலத்தில் நடந்த காந்தி கொலை துன்பியல் சம்பவமாகிப்போனது. ஆர்.எஸ்.எஸ் தடைசெய்யப்பட்டு மீளவும் சமூக எழுச்சிக்காகக் கட்டமைக்கப்பட்டது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் தீண்டாமையை நேரடியாகவே நீக்குவதற்கான முயற்சிகளில் இறங்கினார்கள். இதன் பலனை ஆர்.எஸ்.எஸ் இன்று அந்த இடங்களில் அனுபவிக்கிறது. அங்குள்ள இடதுசாரிக…

இலங்கையின் மதமாற்றங்களும் அரவிந்தன் நீலகண்டனின் உடையும் இந்தியாவும்

அரவிந்தன் நீலகண்டனின் கட்டுரைகளை அவருடைய வலைத்தளத்தில் படித்துள்ளேன். அத்துடன் அவரது இந்திய அறிதல் முறைகள், பஞ்சம் படுகொலை கம்யூனிசம் மற்றும் ஆழி பெரிது போன்ற நூல்கள் மீள்வாசிப்புக்கு உட்படுத்தவேண்டிய நிலையிலுள்ளது. பலர் சொன்னார்கள் இந்து மதத்துக்கும் இந்துத்துவத்துக்கும் வித்தியாசம் உங்களுக்குத் தெரியவில்லை என்று. இந்து மதம் என்பதை மதச்சார்பின்மை என்று பலர் மடைமாற்றி வைத்துள்ளனர் என்பது ஒரு பக்கம் உண்மையாக உள்ளது.  அத்துடன் இந்துத்துவம் என்பது இந்துவாக வாழ்தல் (Hinduness) என்று பொருள். இந்த மடைமாற்றத்துக்கும் பன்னெடுங்கால இந்துமதத்தை அழிக்க முனையும் அந்நிய சக்திகளை எதிர்கொள்ள உருவானதே இந்துத்துவம் என்ற கோட்பாடு என்பது அநேகமான இந்துத்துவர்களின் நிலைப்பாடு. இதற்குள்ளிருந்து புடைத்தெழும் இந்துத்துவ வெறியைத்தான் பலர் இந்துத்துவம் என்று இங்கே தவறாக வகுக்கின்றனர். அதனால் தம்மைப் பலர் இந்துத்துவர் என்று சொல்லவே பின்வாங்குகின்றனர். ஆனால் அரவிந்தன் நீலகண்டன் தன்னை வெளிப்படையாகவே இந்துத்துவர் என்று அறிவித்துக் கொண்டவர்.  அவருடைய கோணத்திலும் வாசிப்பனுபத்திலும் வைத்து நோக்கினால் அதில் தவறுகள் இ…

இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் ஒரு பார்வை

இந்து மதம் என்பது சாதியப் பிரிவால் மட்டுமே வலுப்பெற்றுள்ளது என்ற வலுவான கோஷம் அண்மைக்காலமாக உண்டாக்கப்பட்டுள்ளது. அதனைப் பிரச்சார நோக்கில் பலர் கொண்டு செல்கின்றனர். அடிமைத்தனத்தை வலியுறுத்திய ஹேகல் முதலியவர்களை இங்கே பெரிய இடத்தில் வைத்திருக்கும் இடதுசாரிகளும் திராவிடச் சிந்தனையாளர்களும் அரசியல் காரணங்களுக்காக இந்து மதத்தை மிக ஆழமாக இழிவுபடுத்துவதைக் காணமுடிகிறது. இதனால் இந்து ஞான மரபு என்பது மிக ஆழமாகப் பாதிக்கப்படுகிறது. அண்மையில் ஒரு தமிழ் டயஸ்போரா கூறினார் இந்துஞான மரபு என்பதே ஒரு போலியான கட்டுக்கதை என்று. அவர் எதற்காக அந்த வாதத்தை முன்வைக்கிறார் என்று ஆழமாக யோசித்துப் பேசும் பேச்சைக் கொண்டு பார்த்ததும் புரிந்து கொள்ள முடிந்தது. இலங்கையில் இந்திய அமைதிப்படையினர் மேற்கொண்ட அட்டூழியங்களுக்கு அவர் முகம் கொடுத்துள்ளார். அப்பபோது குடும்பத்துடன் புலம்பெயர்ந்து அய்ரோப்பா சென்றுள்ளார். அதனால் இந்திய மரபும் இந்து மதமும் வீணானவை என்ற கருத்தினைத் தனக்குள் போட்டுவைத்துள்ளார். எப்போதும் முன் முடிபுகளுடன் உரையாடுகிறார். இதைத்தான் பல தசாப்தங்களாக இங்குள்ள பலர் செய்து வருகின்றனர். இது ஒருசில கால…

சங்ககாலத்து இராமன்: சில குறிப்புகள்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் இந்துக் கடவுளரில் ஒருவரான ராமன் பற்றிய குறிப்புக்களை  கடுவன் மள்ளனார் என்றொரு புலவர் எழுதியுள்ளார். முதல் மூன்று நூற்றாண்டின் நடுப்பகுதியில் எழுதப்பட்ட அகநானூற்றிலேயே இந்தக் குறிப்புகள் தெளிவாக உள்ளன.

"வென்வேல் கவுரியர் தொன்முது கோடி 
முழங்கு இரும் பௌவம் இரங்கும் 
முன் துறை வெல்போர் இராமன் 
அருமறைக்கு அவித்த பல்வீழ் ஆலம் போல 
ஒலி அவிந்தன்று இவ் அழுங்கல் ஊரே"

இங்கே கவுரியர் என்பது பாண்டியரையும் கோடி என்பது தென்னகத்துத் தனுஷ் கோடியையும் குறிக்கிறது. இப்பாடலின் பொருளாக, ராமன் வெற்றிபெற்றுப் பாண்டியரின் தேசத்துக்கு வந்தடைந்து ஆலமரத்தடியில் அமர்ந்து மறைஞானப் பாடல்களை ஓதுகிறான். அம்மரத்தின் மேலிருந்த பறவைகள் தமது சப்தங்களை விட்டுவிட்டு ராமனின் மறையோதலைக் கேட்டபடியுள்ளன. இது கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட அகநானூற்றில் மள்ளனார் பாடிய ஒரு பாடல்.

சமகாலத்தில் ஒருவர் தனது சுய கருத்தைக் கூறுவதற்கு இணையத்தின் செல்வாக்கை  அதிகமாக நம்பியுள்ளார். இந்த ஆதிக்கம் அதிகரிக்கத் தொடங்கியதும் எவ்வித வரலாற்று வாசிப்பு அறிவுமற்ற அதே வேளை…

போகன் சங்கரின் கண்ணாடி போட்ட பூனைக்குட்டிகள் 02

பெண் ஒரு சமூகத்தின் இனப்பெருக்கத்துக்குப் பெரிதும் பங்காற்றுபவள். இது வெறுமனே இனப்பெருக்கத்துக்கு என்ற கருத்தை இங்கே முன்வைக்கவில்லை. இங்கு கவிதை பற்றி உரையாடுகையில் சில ஆதாயங்கள் விடுபட்டே பேசப்படும். போகனின் கவிதையைப் பற்றிப் பேசும் போது பல இடங்களில் பெண்கள் பற்றி மலினமாக எழுதுகிறார் என்ற வாதத்தைச் சிலர் முன்வைத்துள்ளனர். அது அவர்களது வாசிப்பில் உள்ள குறைபாடு என்றே கூறவேண்டும். அல்லது கவிதையை மேலோட்டமாகப் புரிந்து கொண்டதால் உருவான அதிருப்தி என்றும் கூறலாம்.

"கால்களுக்கு நடுவே
ஒரு சிறிய முரசுபோல
துடித்த சிசுவை
ஒரு கிழங்கைக் கெல்லி எறிவது போல
ஒரு பெரிய இடுக்கியைக் கொண்டு
பிடுங்கி எறிகிறாள்
டாக்டர் மாலதி
ஆண்குழந்தை என்று
வெளியே நிற்பவர்களிடம் சொல்கிறாள்
அவளுக்கு ஒரு புன்னகையும்
இனிப்பும் தரப்படுகிறது.

வெளியே வந்ததும்
வீட்டிலிருந்து வந்த ஒரு அழைப்புக்கு
ஆத்திரமாய் எதுவோ போனில் பேசுகிறாள்
இறுகிய  தாடையுடன் அவள்
காரை எடுத்த வேகம் கண்டு
புறாக்கள் சிதறி ஓடுகின்றன.
தூமைக்கால யோனி போல
சிவந்த அந்த அதிகாலையில்
அவள் மிக வேகமாகச் சென்று
அந்த பெரிய வாகனத்தின்
பின்னால் மோதுகிறாள்.

அதீத களைப்ப…

இலங்கையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை வலுப்படுத்துதல்.

பொதுவாக நாம் திட்டமிட்ட சிங்கள-பௌத்த குடியேற்றங்களைப் பற்றிப் பேசுகிறோம். ஆனால் பேரினவாத நிழலில் நின்றுகொண்டு அத்துமீறிய முஸ்லிம் குடியேற்றங்கள் தொடர்ந்து தமிழ்ப் பகுதிகளில் நடைபெறுகிறது. இது பற்றி யாரும் பேசுவதில்லையே. ஏன்?. யாராவது ஒரே மொழி பேசும் ஒரே இனத்தவர்கள் நாம் என்று கூறினால் அதைச் சரியான முட்டாள்த்தனம் என்றுதான் கூறுவேன். அதனை எந்த ஒரு முஸ்லிமும் தமிழரும் ஏற்கப்போவதில்லை. இலங்கையில் இருப்பது மூன்று பிரதான இனங்களாகும். அதில் முஸ்லிம் இனமும் ஒன்று. தமிழக முஸ்லிம்களின் அதிகார நிலைப்பாடுகளுடன் வைத்து இலங்கை முஸ்லிம் அதிகாரத் தளத்தைப் பார்ப்பவர்களே அதிகம். இலங்கையின் அதிக விழுக்காடு முஸ்லிம் அதிகார மையம் அடிப்படைவாத மதப் பரப்புகையை நோக்காகக் கொண்டது. நலிந்த இனத்தை நசுக்குவதைக் கடப்பாடாகக் கொண்டது.


இலங்கையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் துணை அமைப்பான "சேவா பாரதி" என்று யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்குச் சேவை செய்யும் அமைப்பு ஒன்று வடகிழக்கில் இயங்கிவருகிறது. இதற்கு அரச அனுசரணை பெருமளவில் உள்ளது. இதன் பிரதான பணி மதமாற்றங்களைத் தடுத்து யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் …