Skip to main content

Posts

Showing posts from May, 2018

காமத்தின் தற்கொலைக் காடு.

சங்கப் புலவரான மிளைப்பெருங்கந்தன் காமம் பற்றி எழுதிய பாடலொன்று உள்ளது. அதில் காமம் என்பது சோகமும் நோயும் அல்ல. இயல்பாகவே மனிதரிடம் உண்டாகும் ஒன்று. நினைக்கும் போதெல்லாம் இன்பத்தைத் தருவதுதான் காமம். எதைப்போல என்றால், ஒரு கிழட்டுப் பசுவானது மேட்டு நிலத்திலுள்ள பசும்புற்களைத் தடவி அசை போட்டாற் போன்ற  இன்பம் தரக்கூடியது என்று அதன் பொருள் அமைகிறது. காலந்தோறும் தமிழ் தொடர்ந்துவர அகக்  காரணமாகக் காமமும் உள்ளது. அதைப்பற்றிப் பாடாத சங்கநூல்களே இல்லை. (இந்தப் பாடலை ஜெயமோகன் தனது காடு நாவலின் காப்பாக வைத்துத் தொடங்கியிருப்பார். அந்நாவல்கூட காதல் காமத்தின் மிக நுணுக்கமான பகுதிகளைச் சொல்லிச் செல்கிறது) அடுத்து வந்த அறநெறிக் காலத்தில் காதல் காமம் பற்றிய நோக்கு வீழ்ச்சியுற்றது. இதற்கு அவைதிக மதங்களின் எழுச்சி ஒரு காரணமானது. இருந்த போதிலும் சிலப்பதிகாரத்தின் பல இடங்களில் காமம் காதல் இரண்டின் விக்கிரகங்களைக் காணலாம். மாதவியைக் காமத்தின் குறியீடாகவும் வைத்துப் பார்க்கலாம். பின்வந்த பக்திநெறிக் காலம் இதிலிருந்து ஒருபடி மேலே சென்று கடவுளுடன் காமம் பாராட்டத் தொடங்கியது. பக்திப் பாசுரங்களில் நெக்குருகிய …

சுந்தர ராமசாமி: இந்தியப் பண்பாட்டின் தமிழ் முகம்

உன் கவிதையை நீ எழுது என்று எண்பதுகளில் ஒலித்த அழுத்தமான கவிதைக் குரலுக்குச் சொந்தக்காரர் சுந்தரராமசாமி. அந்தக் குரலால் வழிநடத்தப்பட்டு  அவரது வழிவந்த மாணாக்கர்கள் பலரை இன்றும் தமிழ் எழுத்துலகில் நாம் காணமுடியும்.  சுந்தரராமசாமியின் சிறந்த கவிதைகள் என்று கருதப்படுபவை கொல்லிப்பாவை இதழில் வெளிவந்தவையாகும். பசுவய்யா என்ற பெயரில்தான் அநேகமான கவிதைகளை எழுதியுள்ளார். இது தவிர தொன்னூறுகளில் கோமல் சுவாமிநாதன் ஆசிரியராக இருந்து நடாத்திய சுபமங்களா என்ற இதழிலும்   சுரா அவர்கள் இயங்கியுள்ளார். இன்று வரை வெளியிடப்பட்டுவரும் சிற்றிதழான காலச்சுவடு 1988 ஆம் ஆண்டு சுரா உருவாக்கியதேயாகும். சுந்தரராமசாமியை நவீனத்துவத்தின் அசல் முகம் என்றே பலர் வகைப்படுத்துகின்றனர். பாரதியார் உண்டாக்கிவிட்ட மரபிலிருந்து புதுமைப்பித்தன் முதலியவர்களின் வழி மரபாக வந்தவராகவே சுந்தரராமாசியை நாம் அடையாளம் காணமுடியும். அவருடைய கவிதைகள், கதைகள், நாவல்கள்,கட்டுரைகள் அனைத்தும் நவீனத்தமிழின் மிக முக்கியமான ஆக்கங்களாகும். 1931 மே மாதம் 30 ம் தேதி பிறந்த சுரா மலையாளம், ஆங்கிலம், சமஸ்கிருதம் முதலிய மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தார். இ…

மதங்களின் பன்மைத்துவம்.

அண்மையில் ஒரு கல்வியியலாளரின் மதங்கள் பற்றிய பேச்சைக் கேட்கும்போது சில விடயங்கள் தெளிவாகியது. பக்கச்சார்பான பேச்சுக்களைக் கேட்டாலும் வரலாற்று வழியான வாசிப்பு நம்மைத் தெளிவான சிந்தனையில் கொண்டுவந்து சேர்க்கும் என்பது எனது நம்பிக்கை. அதைத்தான் அவரது பேச்சு எனக்கு ஞாபகமூட்டியது. இஸ்லாம் மற்றும் கிறிஸ்த்தவம் இந்த இரண்டு மதங்களும் உலகம் முழுமைக்கும் தமது மதங்களை யார் முதலில் பரப்புவது என்று தொடர்ந்து இயங்கி வருகின்றன. அவற்றின் பரவல் இங்கு உருவான பின் அவற்றுடன் கிளைத்து வந்த மத அடிப்படைவாத எண்ணக்கருக்கள் இங்குள்ள மரபுகளுடன் எவ்வாறு ஒத்திசைந்து நடக்கவேண்டும் என்ற பிரக்ஞை அவர்களிடம் இல்லாமலே போய்விடுகிறது. உதாரணமாக சூஃபியிச மரபு தற்போது இல்லாமலே போய்க்கொண்டிருக்கிறது.
இந்த மதப் பரவலாக்கத்துக்குத்  தடையாக உள்ள பழங்குடி மற்றும் பூர்வீக மரபுகளைக் கொச்சைப்படுத்தி ஆராய்ச்சி என்ற பெயரில் ஏதேனும் திரிபுகளின் துணையுடன் விரிவாக கட்டுரைகளை எழுதி தமது கொள்கைகளைப் பரப்புபவர்களாகவே இந்த இரண்டு மதநிறுவனங்களும் உள்ளன. பின்னர் அதனை உண்மை என்றும் பிரச்சாரம் மூலம் நம்ப வைப்பர். இந்தியாவில் நடப்பது இதுதான். இலங…

கே.சச்சிதானந்தன் கவிதைகள்: ஒரு அறிமுகம்.

கவிதைகள் மீதான ஆர்வத்தைத் தொடக்க காலத்தில் ஏற்படுத்தியவர்களில் மிக முக்கியமான ஒருவராக கே.சச்சிதானந்தனையே இன்று நினைத்துப் பார்க்கிறேன். நான் வாசித்த அநேகமான சச்சிதானந்தனின் கவிதைகளை சிற்பி மொழிபெயர்த்திருந்தார். ஒருசிலவற்றை நிர்மால்யாவின் மொழிபெயர்ப்பிலும் வாசித்துள்ளேன். ஆலிலையும் நெற்கதிரும், கவிதை மீண்டும் வரும் என்ற இரண்டு தொகுப்புக்கள் சிற்பியின் மொழிபெயர்ப்பில் தமிழில் வெளிவந்துள்ளன. சச்சிதானந்தனின் கவிதைகளைப் புத்தகமாகப் படிக்க முன்பு கதவு மற்றும் ஒரு பெண்ணைக் காதலிப்பதென்றால், நினைவில் காடுள்ள மிருகம் இந்த மூன்று கவிதைகளையும் தொடக்ககாலத்தில் அடிக்கடி வாசிப்பதுண்டு. இதில் கதவு என்பதை அவருடைய குரல் பதிவில் கேட்டுள்ளேன். "வாதிலும் ஏற்றி நடக்குன்ன..." என்று உணர்வுடன் அந்தக் கவிதையை ஆரம்பித்தார். அப்பொழுதுதான் கதவு என்பதன் மலையாள அர்த்தத்தை வாதில் என்றும் அறிந்து கொண்டிருந்தேன்.  அக்காலத்தில் மலையாளத்தை ஓரளவுக்கு விளங்கிக் கொள்வதற்கு அதிக முயற்சி செய்துகொண்டிருந்தேன்.  மலையாளத்தைப் புரிந்து கொள்ள எம்.ஜி. ஸ்ரீகுமாரின் சரியான உச்சரிப்பில் அமைந்த மலையாளப் பாடல்களையும் மேலும்…

மு.தளையசிங்கம் என்னும் முதற் சிந்தனையாளன்

மு. தளையசிங்கம் பற்றி அவருடைய காலத்தில் பெரிதாகப் பேசப்படவில்லை என்ற குறையை இன்றைய எழுத்தாளர்கள் பலர் முன்வைத்துள்ளனர். எனக்குத் தெரிந்து அவருடைய காலத்து எழுத்தாளர்களில் இரண்டு பேர் தளையசிங்கத்தின் சிந்தனைகளைப் பற்றி எழுதியுள்ளனர். "தளையசிங்கத்தின் பிரபஞ்ச யதார்த்தம் (1982)" என்ற பெயரில் சுந்தரராமசாமி ஒரு நீளமான கட்டுரையை எழுதியுள்ளார். அதுபோல க.கைலாசபதி "இலக்கியத்தில் மார்க்சீய எதிர்ப்பு- ஒரு புத்திசீவியின் இரண்டக நிலை (1973)" என்று ஒரு கட்டுரையையும் எழுதியிருந்தார். சுந்தரராமசாமியின் கட்டுரையில் இந்திய ஞான மரபின் துணைகொண்டு ஒரு சுதந்திரமான விமர்சனத்தை தளையசிங்கம் மீது நிகழ்த்தியிருப்பார். ஆனால் கைலாசபதி புறவயப் பொருள்முதல்வாத நோக்கிலும் தான் சார்ந்த சித்தாந்தத்தை முன்னிலைப்படுத்தியும் மிகக் காட்டமான தொனியில் தளையசிங்கத்தை அணுகியிருந்தார். இந்த இரண்டு கட்டுரைகளின் குழப்பத்தை மொத்தமாகத் தீர்க்கும் முகமாக ஜெயமோகன் எழுதிய கட்டுரை எனக்குப் பெரிதும் உதவியிருந்தது. "மு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும்: தளையசிங்கத்தைப் புரிந்து கொள்வதற்கான அடிப்படைகள்" எ…

இலங்கையின் மதமாற்றங்களும் அரவிந்தன் நீலகண்டனின் உடையும் இந்தியாவும்

அரவிந்தன் நீலகண்டனின் கட்டுரைகளை அவருடைய வலைத்தளத்தில் படித்துள்ளேன். அத்துடன் அவரது இந்திய அறிதல் முறைகள், பஞ்சம் படுகொலை கம்யூனிசம் மற்றும் ஆழி பெரிது போன்ற நூல்கள் மீள்வாசிப்புக்கு உட்படுத்தவேண்டிய நிலையிலுள்ளது. பலர் சொன்னார்கள் இந்து மதத்துக்கும் இந்துத்துவத்துக்கும் வித்தியாசம் உங்களுக்குத் தெரியவில்லை என்று. இந்து மதம் என்பதை மதச்சார்பின்மை என்று பலர் மடைமாற்றி வைத்துள்ளனர் என்பது ஒரு பக்கம் உண்மையாக உள்ளது.  அத்துடன் இந்துத்துவம் என்பது இந்துவாக வாழ்தல் (Hinduness) என்று பொருள். இந்த மடைமாற்றத்துக்கும் பன்னெடுங்கால இந்துமதத்தை அழிக்க முனையும் அந்நிய சக்திகளை எதிர்கொள்ள உருவானதே இந்துத்துவம் என்ற கோட்பாடு என்பது அநேகமான இந்துத்துவர்களின் நிலைப்பாடு. இதற்குள்ளிருந்து புடைத்தெழும் இந்துத்துவ வெறியைத்தான் பலர் இந்துத்துவம் என்று இங்கே தவறாக வகுக்கின்றனர். அதனால் தம்மைப் பலர் இந்துத்துவர் என்று சொல்லவே பின்வாங்குகின்றனர். ஆனால் அரவிந்தன் நீலகண்டன் தன்னை வெளிப்படையாகவே இந்துத்துவர் என்று அறிவித்துக் கொண்டவர்.  அவருடைய கோணத்திலும் வாசிப்பனுபத்திலும் வைத்து நோக்கினால் அதில் தவறுகள் இ…