Skip to main content

Posts

Showing posts from June, 2018

வாழும் சிற்பங்கள்- ஜெயமோகன் பதில்கள்

ஜெயமோகனின் முடிவின்மையின் விளிம்பில்

அண்மையில் அரச பணிக்கான பயிற்சியின் போது எங்களைப் பற்றிய சுய அறிமுகம் ஒன்று செய்யவேண்டி ஏற்பட்டது. அதில் ஒவ்வொருவரும் தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். எனது கட்டம் வந்ததும் எனது வாழ்வில் பெற்றோருக்குப் பிறகு இரண்டு பேர் முக்கியமானவர்கள், ஒருவர் எனது பழைய காதலி. மற்றவர் ஜெயமோகன் என்று கூறினேன். பழைய காதலி மூலம் பெண்களைப் புரிந்து கொள்ளவும் ஜெயமோகன் மூலம் இலக்கியத்தையும், வாழ்க்கையையும், வெறுமையையும் அனுபவங்களுடன் இணைத்துப் பார்ப்பது எப்படி என்று அறிந்து கொண்டுள்ளேன் என்றும் கூறினேன். பலருக்கு ஜெயமோகன் என்பவர் யார் என்று விளக்கம் கூறவேண்டிய துரதிஷ்டம் அப்போது உருவானது. அவரை ஒரு படைப்பாளி என்றும் விமர்சகர் என்றும் தெளிவுபடுத்திய போது ஏற்படாத தெளிவு, ஜெயமோகன் தமிழ்-மலையாள சினிமாவின் கதையாசிரியர் என்ற பிறகே அவரைப் பற்றித் தேடிப் பார்க்கும் ஆவல் பலருக்கு ஏற்பட்டது. இங்கு குறிப்பிட வேண்டிய முரண் யாதெனில், ஜெயமோகன் தான் சினிமாவில் இயங்குவது வெறுமனே நல்ல தொழில் என்றும் இலக்கியமே தனது வாழ்க்கை இலட்சியம் என்றும் அடிக்கடி கூறி வருகிறார். நம்மில் பலர் ஒருவரது தொழிலை வைத்தே ஒருவரை எட…

சங்ககாலத்து இராமன்: சில குறிப்புகள்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் இந்துக் கடவுளரில் ஒருவரான ராமன் பற்றிய குறிப்புக்களை  கடுவன் மள்ளனார் என்றொரு புலவர் எழுதியுள்ளார். முதல் மூன்று நூற்றாண்டின் நடுப்பகுதியில் எழுதப்பட்ட அகநானூற்றிலேயே இந்தக் குறிப்புகள் தெளிவாக உள்ளன.

"வென்வேல் கவுரியர் தொன்முது கோடி 
முழங்கு இரும் பௌவம் இரங்கும் 
முன் துறை வெல்போர் இராமன் 
அருமறைக்கு அவித்த பல்வீழ் ஆலம் போல 
ஒலி அவிந்தன்று இவ் அழுங்கல் ஊரே"

இங்கே கவுரியர் என்பது பாண்டியரையும் கோடி என்பது தென்னகத்துத் தனுஷ் கோடியையும் குறிக்கிறது. இப்பாடலின் பொருளாக, ராமன் வெற்றிபெற்றுப் பாண்டியரின் தேசத்துக்கு வந்தடைந்து ஆலமரத்தடியில் அமர்ந்து மறைஞானப் பாடல்களை ஓதுகிறான். அம்மரத்தின் மேலிருந்த பறவைகள் தமது சப்தங்களை விட்டுவிட்டு ராமனின் மறையோதலைக் கேட்டபடியுள்ளன. இது கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட அகநானூற்றில் மள்ளனார் பாடிய ஒரு பாடல்.

சமகாலத்தில் ஒருவர் தனது சுய கருத்தைக் கூறுவதற்கு இணையத்தின் செல்வாக்கை  அதிகமாக நம்பியுள்ளார். இந்த ஆதிக்கம் அதிகரிக்கத் தொடங்கியதும் எவ்வித வரலாற்று வாசிப்பு அறிவுமற்ற அதே வேளை…

நற்றிணையின் பிற்சேர்க்கைத் தவறுகள்

நானூறு பாடல்களின் தொகுப்பாகவுள்ள சங்க இலக்கிய நூலான நற்றிணையில், 234 ஆம் செய்யுளாக உள்ள பாடல் உண்மையில் அந்தக் காலத்துக்கு உரிய பாடலே அல்ல. அதனைப் பின்வந்த (ஏழாம் நூற்றாண்டு) இறையனார் அகப் பொருளுரையில் குறிப்பிடப்பட்ட மேற்கோளை ஆதாரமாகக் கொண்டு பல ஆய்வாளர்கள் நற்றிணைக்குள்  இணைத்து வைத்துள்ளனர். (வாய்மொழி மரபாக இருந்த சங்க இலக்கியங்கள் நெடுங்காலம் கழிந்த பிறகே அச்சு வடிவம் பெற்றது. அரிய பல தமிழ் நூல்களை அச்சேற்றிய பங்கு தமிழ்ப் பிராமணர்களையே சாரும். உவேசா இதற்கு முழு முதலுதாரணம்.  உ.வே.சா போன்றோரின் பதிப்புப் பணிகளை மேற்கோளுடன் உள்வாங்கி இருந்தால் இதுபோன்ற தவறுகள் நேர்ந்திருக்காது)களவியல் காரிகையின் பதிப்பு ஆசிரியரான எஸ்.வையாபுரிப்பிள்ளை நற்றிணையின் 234 ஆம் பாடலாக இறையனார் அகப்பொருள் உரையில் உள்ள பாடலாக இருக்கலாம் என்று சந்தேகத்துடன்தான் கூறுகிறார். நற்றிணைக்குள் பின்வந்த தமிழ் அறிஞர்களால் ஊகத்தின்படி புகுத்தப்பட்ட பாடல் இதுதான். "சான்றோர் வருந்திய வருத்தமும் நுமது
வான்தோய்வு அன்ன குடிமையும் நோக்கித்
திருமணி வரன்றும் குன்றம் கொண்டிவள்
வருமுலை ஆகம் வழங்கினோ நன்றே
அஃதான்று, அடைபொருள…

ஜெயமோகனின் இந்திய ஞானம்

ஜெயமோகனின் இந்திய ஞானம் என்ற இந்நூல் இந்திய ஞானம் பற்றி எனக்கு மேலதிக தேடலையும் புரிதலையும் உண்டாக்கிய ஒன்று என்றே கூறுவேன். அவருடைய "இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்" என்ற நூல் வழங்கிய அறிதலையும் புரிதலையும் வேறு எந்தவொரு நூலும் இந்து ஞான மரபு பற்றி தெளிவாக்கியதில்லை. அந்த நூலில் இடம்பெற்ற ஆறுதரிசனங்கள் பற்றிய பிரக்ஞை இன்றும் என் ஞாபகத்தில் அறையப்பட்டுள்ளது. அதிலிருந்துதான் பல படைப்புக்களை என் பார்வையில் அணுகவும் வழி செய்தது.  படைப்புக்களை வாசிப்பதற்கும் புனைவல்லாத கட்டுரைகளைப் படித்து அறிவைத் தெளிவு படுத்திக் கொள்வதற்கும் இடையில் உணர்வு மற்றும் அறிவு இரண்டும்தான் எல்லையாக உள்ளது.

இந்திய ஞானம் என்ற ஜெமோவின் இந்த நூல் அறிமுகங்கள், ஆய்வுகள், விவாதங்கள் என்று மூன்று பகுப்புக்களினை முன்னிறுத்திச் சொல்கின்றது. அறிமுகங்களிலுள்ள ஆறு கட்டுரைகள் நமது அன்றாட வாழ்வில் இடம்பெறும் தரிசன மற்றும் ஆழ்மன காட்சிகளை மரபிலிருந்து தெளிவுபடுத்துகிறது. குறிப்பாகப் பண்டைய தமிழ் இலக்கியத்தை இன்றைய நவீன மத பிம்பங்களுடனும் தொடர்ந்து செல்லும் நடைமுறைகளுடனும் விளக்குகிறார். இன்றைய சந்ததிகள் பலருக்குள்ள…

கண்டராதித்தனின் கவிதைகள்: ஒரு பார்வை

தமிழில் நவீன கவிதையின் தற்கால முகத்தை எழுத்து என்ற சிற்றிதழ் மூலம் அழுத்தமாக உருவாக்கியவர்கள் கா.நா.சு மற்றும் சி.சு.செல்லப்பா ஆகிய இருவரும்தான். பிரமிள், நகுலன், பசுவையா (சுரா), கா.நா.சு முதலியவர்கள் எழுதிய கவிதைகளே இன்றைய நவீன கவிஞர்களுக்கும் கவிதைகளுக்கும் முன்னோடியாகவும் இருந்துள்ளது. இருந்து வருகிறது. 'புத்தியால் எழுதப்படுபவைதான் புதுக்கவிதை' என்று ஜெயகாந்தனும் 'புத்தியாலும் எழுதப்படுபவையே புதுக்கவிதை' என ஜெயமோகனும் ஒரு இடத்தில் கூறியிருந்தனர். ஜெயகாந்தன் அறிவார்ந்த தன்மையே நவீன கவிதைக்குப் போதும் என முன்வைக்க ஜெயமோகன் அதுவும் தேவை என்று குறிப்பிட்டுள்ளார். கவிதை பற்றிய ஜெயமோகனின் இந்தக் கருத்து முக்கியமான ஒன்று. ஏனெனில் வெறுமனே புத்தியின் துணைகொண்டு எழுதப்படும் கவிதைகள் இயந்திரவாத அணுகுமுறை கொண்டவை. ஆனால் புத்தியாலும் எழுதப்படும் கவிதைகளை அதாவது மனத்தையும் அதற்குள் ஊன்றிக்கொண்டு பேசுவது என்பதுதான் முக்கியமானது. நவீன கவிதையின் தேவைப்பாடும் அதுதான். இன்றைய காலகட்டத்தில் கவிதையைத் தேர்ந்தெடுத்துத் தான் நான் வாசிப்பதுண்டு. கவிதையை வாசிப்பவர்களைக் காட்டிலும் எழுதுபவர்க…

பூமியை வாசிக்கும் சிறுமி 01

"சொல்லிலிருந்து வெளியேறும் மௌனத்தின் குரல் கேட்கலாகுமா?  எனில், கவிதையின் ஜீவிதம் புரியும் உனக்கு"
-சுகுமாரன்.

வாழ்க்கை அனுபவத்தில் இரண்டுமற்ற மற்றும் இரண்டுமாகிய தருணம் பல தருணங்களில் நமக்கு ஏற்படும். அதனை நாம் கடந்து செல்வதற்குத்தான் யோசிப்பதுண்டு. அதன் தோற்றுவாயைப் பற்றிக் கிரகிப்பவர்கள் குறைவு. அல்லது அதனை அசிரத்தையாகவே எண்ணி நகர்ந்து விடுவோம். இவற்றை எழுத்தின் வழி வெளிப்படுத்தும் கலைஞர்கள் பல வடிவங்களில் தமது இரண்டுமற்ற இரண்டுமாகிய விடயங்களை வெளிப்படுத்தியதுண்டு. இதனைத் தத்துவத்தில் விசிட்டாத்துவைதம் என்று கூறுவர். அதாவது இரண்டுமற்ற தன்மை. அப்படியானால் இரண்டுமுள்ள தன்மைக்கு எதனைக் காட்டுவது என்ற சந்தேகம் எழக்கூடும். அதற்கு சைவ சித்தாந்தத்தின் தத்துவ முடி வரை சென்று மீள வேண்டும் என்பதனால், இவற்றை இந்த இடத்தில் தவிர்த்துவிட்டு சுகுமாரனின் நவீன கவிதை ஒன்றை வாசிக்கும் போது எனக்கு ஞாபகத்தில் உருவான சிந்தனையை இங்கே பகிரவேண்டியுள்ளது. அதற்குள் மேற்குறிப்பிட்ட இரண்டு விதமான கூறுகளும் உள்ளது.
"அள்ளி
கைப்பள்ளத்தில் தேக்கிய நீர்
நதிக்கு அந்நியமாச்சு
இது நிச்சலனம்
ஆகாயம் அலைபுரளும் அ…