Skip to main content

Posts

Showing posts from August, 2018

புதியகாலமும் மனுஷ்யபுத்திரனும்

யுவன் சந்திரசேகரின் பகடையாட்டம், மணற்கேணி, குள்ளச்சித்தன் சரித்திரம். மற்றும் கதைகள்.

எஸ்.ராமகிருஷ்ணனின் உறுபசி, யாமம், நெடுங்குருதி, உபபாண்டவம்.

எம்.கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகை.

ஜோ டி குரூஸின் ஆழிசூழ் உலகு.

சு.வெங்கடேசனின் காவல்கோட்டம்.

சு.வேணுகோபால் கதைகள்.

கண்மணி குணசேகரனின் அஞ்சலை.

சாரு நிவேதிதாவின் ஸீரோ டிகிரி.

மற்றும் மனுஷ்யபுத்திரனின் கவிதைகள்.

முதலான தமிழின் தவிர்க்கமுடியாத எழுத்தாளர்களின் படைப்புக்கள் பற்றி நுணுக்கமான பார்வையை முன்வைத்த விமர்சனப் புத்தகம் ஜெயமோகனின் புதியகாலம்.



இதில் மிகச் சிறப்பாக மனுஷ்யபுத்திரனின் கவிதைகள் பற்றி நவீன மற்றும் செவ்வியல் பார்வையில் அவரது படைப்பின் தனித்தன்மைகளைக் கவிதைகள் பற்றிய ஆய்வு வெளிப்படுத்தியது. இதற்கான தலைப்பு "கடவுளற்றவனின் பக்திக் கவிதைகள்" என்று அமைந்திருந்தது. இந்த விமர்சனத்தின் எந்த இடத்திலும் தனிநபர் காழ்ப்பினை ஜெயமோகன் வெளிப்படுத்தி இருக்கவில்லை. வெறும் இலக்கியப்பார்வைதான் மிகத்தரமான மொழிநடையிலும் ஒப்பியல் மற்றும் அழகியல் நோக்கிலும் அதில் எழுதியிருந்தார்.

ஆனால் மனுஷ்யபுத்திரனின் அண்மைய தேவி கவிதைகள் பற்றியும் அதன் மீதா…

பயணியின் சுவடுகளும் காட்சியென்று பல நினைவுகளும்.

ஒரு நிரந்தர பணி கிடைத்ததும் பலர் கேட்கும் கேள்விகளில் ஒன்று இதற்கு முன்பு என்ன வேலை செய்து கொண்டு இருந்தீர்கள் என்பதுதான். நான் இரண்டு பதில்கள் வைத்திருப்பதுண்டு. ஒன்று நான் ஒரு வாசகன் என்பதும், மற்றையது யாத்திரீகன் அல்லது பயணி அல்லது ஊர் சுற்றுபவன் என்பதும்தான். இதனைக் கேட்பவர்களின் புரிதலுக்கு அமைய  இடம், பொருள், ஏவல் என்ற மட்டில் வைத்துச் சொல்வதுண்டு. வாசகனாக இருக்கும் போது வீட்டை விட்டு வெளியே வராத சமைந்த பெண்ணின் மனம் போலவும், பயணியாக ஊரைச் சுற்றும் போது விடலைப் பொடியன்களின் மனநிலையுடனும் என்னை மாட்டி விட்டுக் கொள்வதுண்டு. இந்த இரண்டாகவும் இருக்கும் போது எனக்கான கடமைகள் எவை என்று எந்த கட்டுப்பாடும் இருந்துவிடவில்லை. அதே நேரம் ஒரு நிரந்தர பணியில் இணைந்த பின்னர்தான் முன்சொன்ன இரண்டையும் முகாமை செய்து மூன்றாவதாக உள்ள பணியை இந்த இரண்டுக்குள்ளும் மேலாதிக்கம் கொள்ள விடக்கூடாது என்ற வழக்கத்தை வைத்திருக்க முயல்வதுண்டு.  
"பயணத்தில் உற்சாகமான ஒரே அம்சம் வீட்டுக்குத் திரும்பி வருவதுதான்" என்று கலாப்ரியா ஒருமுறை கூறியிருந்தார். அதே போல "இடத்தையும் மனிதர்களையும் நாம் அறியும் …